பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

மிகவும் கற்றவர்களாகக் கருதப்படும் தமிழர்களின் பேச்சிலுமே வடமொழி மிகைபடப் பாவி வழங்குகின்றது. அதுவும், சமய உண்மை, அறிவியல், தத்துவம், எனக் கலைகளிலுள்ள மரபுச் சொற்கள் ஆகியவற்றை விளக்குமிடங் களில்மட்டுமே இவ்வாறு வடசொற்கள் பெரும்பான்மையும் கையாளப்படுகின்றன. ஆனால், இவ்வாறு காணப்படும் வட சொற்களின் தொகை, ஆங்கில நூல்களிற் கையாளப்பட்டுக் காணப்படும் இலத்தின் மொழிச் சொற்களின் தொகையை விட மிகுதியானதொன்றன்று.

எடுத்துக்காட்டாக, ஆங்கில விவிலிய நூலிலும், தமிழ் விவிலிய நூலிலும் ”பத்துக் கட்டளைகள்” என்ற பகுதியை ஒப்புமைக்காக எடுத்துக்கொண்டு அவற்றின் சொல் தொகுதிகளை ஆராய்வோம். ஆங்கிலச் சொற்களை ஆராயு மிடத்து நேரிடையான இலத்தீன் சொற்களையும், நார் மன் பிரெஞ்சு மூலமாக வந்த இலத்தீன் சிதைவுகளையும் ஒன்றாகச் சேர்த்து இலத்தீனாகக் கணக்கிடுவோம். அதன் பலன் கீழ்வரும் பட்டிகைப்படி யாகும்.

சொல் வகை ஆங்கிலம் தமிழ்

மொத்தம் இலத்தீன் தூய ஆங்கிலம் மொத்தம் வடமொழி தமிழ்
பெயரும் பெயருரியும் 43 14 29 53 21 32
வினை 20 7 13 34 7 27
எண்ணுப் பெயர் 5 0 5 6 1 5

”ஆயிரம்” என்பது வடமொழிப் பெயர். அதனாலேயே எண்ணுப் பெயரி னெதிரில் வடமொழியின் கீழ் ’1’ என்று காணப்படுகிறது.