பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

துணை யுறவு இருக்கிற தென்பது தெள்ளத் தெளிய விளங்கும்.

மேற் “பத்துக் கட்டளைகள்” என்ற தமிழ் விவிலிய நூற்பகுதியில் காணப்படும் வடசொற்றொகையும் ஆங்கில நூற்பகுதியில் காணப்படும் இலத்தீன் சொற்றொகையும் வியக்கத்தக்க வண்ணம் ஒன்றாகக் காணப்படுகின்றதென் பதை அறிந்தோம். அதனால் ஆங்கிலம் இலத்தீனுக்கு எவ்வளவிற்குக் கடன்பட்டுள்ளதோ, அவ்வளவிற்குத் தமிழ் வடமொழிக்குக் கடன்பட்டிருக்கவேண்டும் என்று சொல்வது தவறாகும். ஆங்கிலப் பகுதி தன்மாட்டுள்ள இலத்தீன் சொற்களை நீக்கிவிட முயன்றால், அதன் பொருள் நுட்பங் கெட்டுவிடும். ஆனால், தமிழ்ப் பகுதி தன்மாட்டுள்ள வட சொற்களில் பெரும்பகுதியையோ, அன்றி முழுவதையுமோ நீக்கிவிட்டுத் தக்க தமிழ்ச் சொற்களைப் பெய்துகொண்டால் எவ்வகையிலுங் குறைவுறாது; அவ்வாறு நீக்குவதால் அதன் தூய்மை மாற்றும், செம்மைப் பண்பும் உயர்ந்தொளிருமே யன்றிக் குறைந்து மங்கா. இலத்தீனிலிருந்து பெற்ற சொற்களிற் பலவற்றிற்கு ஆங்கிலோ சாக்ஸனில் நேர்ச் சொற்கள் கிடையா; எனவே, அச் சொற்களை நீக்கிவிடுவ தென்றால் அவற்றின் கருத்துக்களை நீண்ட, அழகற்ற சொற்றொடர் களால்தான் விளக்கவேண்டும். ஆனால் தமிழோ, தனிப்பட்ட வகையில் சொல்வளம் நிறைந்தது. அப்படியிருக்க அஃதேன் வடசொற்களை எடுத்தாண்ட தென்றால், சொல்வள மின்மையானன்று; புதுமை கருதியேயாம் என்று விடுக்க. ”பத்துக் கட்டளைகள்” என்ற விவிலிய நூற்பகுதியை நாட்டுப்புறத் தாழ்ந்த மக்களின் பேச்சு முறையில் அமைத்தால், அதிலுள்ள வடசொற்களின் தொகை மிகவுங் குறைந்து விடும். அதனையே செம்மைப்படுத்தித் திருத்தி இலக்கிய நடையில் அமைப்போமானால், அதில் எஞ்சியுள்ள ஒன்