பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடமொழிக்கும் திராவிட மொழிக்கும் வேறுபாடுகள்

75

வகையிலும் ஒருமை வேற்றுமை யுருவிலிருந்து மாறுபடுவதில்லை; சித்திய மொழிகளும் இவ்வாறே.[1]

(iii) திராவிட மொழிகளின் அஃறிணைப் பெயர்களுக்குப் பன்மை பெரும்பாலும் வழங்குவதில்லை; வினைச் சொல்லில் இஃது இன்னும் அருமை.

(iv) திராவிட மொழியின் நான்காம் வேற்றுமை யுருபாகிய கு-கி-அல்லது கெ வடமொழி அல்லது இந்து - ஐரோப்பிய (ஆரிய) மொழிகளிலுள்ள எந்த வேற்றுமை விகுதியுடனும் ஒத்ததாக இல்லை. ஆனால் அதே சமயத்தில் அது கீழைத் துருக்கியுடனும்[2], பெஹிஸ்தன்[3] பட்டயங்களுடனும் பின்னிஷ் மொழியினங்களுடனும் தொடர் புடையதாயிருக்கின்றது.

(v) இந்து-ஐரோப்பிய மொழிகளில் முன் னுருபுகள்[4] அல்லது ஒட்டுக்கள் (பிரத்தியயம்) பயன்படுத்தப்படும் இடங்களில் எல்லாம் திராவிட மொழிகளும், சித்தியக் குழு மொழிகளும் பின்னுருபுகளை அல்லது ஒட்டுக்களைப் பயன்படுத்துகின்றன. இவ் உருபுகளும், ஒட்டுக்களும் இலக்கண முறைப்படி தனிச்சொல்வகைகள் அல்ல, பெயர்ச்சொல் திரிபுகளேயாம். இவ்வாறே அவற்றின் வினை உரிச்சொற்களும் பெயர் அல்லது தொழிற் பெயர் அல்லது வினை யெச்சங்களே யாகும். அவை எப்போதும் தாம் தழுவும் வினைகளுக்கு முந்தியே வருகின்றன.

(vi) வடமொழியிலும், இந்து-ஐரோப்பிய மொழிகளிலும் பெயருரிச் சொற்கள் பெயர்ச் சொற்களைப் போலவே பால், எண், இடம் ஏற்கின்றன. திராவிட மொழிகளிலும், சித்திய மொழிகளிலும் அவை பால் முதலியவை ஏற்ப


  1. வடமொழியிலும், இந்து-ஐரோப்பிய மொழிகளிலும் ஒருமைக்கும், பன்மைக்கும் ஒவ்வொரு வேற்றுமையிலும் வெவ்வேறு விகுதிகள் உள
  2. Oriental Turkish
  3. Behistun Tablets
  4. Preposition