பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடமொழிக்கும் திராவிட மொழிக்கும் வேறுபாடுகள்

77

(x) திராவிட மொழிகளும், சித்திய மொழிகளும் இந்து-ஐரோப்பிய மொழிகளைப் போல இணைப்பு இடைச்சொற்களைப்[1] பயன்படுத்தாமல் "செய்து" என்ற வினையெச்சத்தையே வழங்குகின்றன.

(xi) உடன்பாடு, எதிர்மறை என்ற இவ் விாண்டு வினைவடிவங்க ளிருப்பது திராவிட மொழிகட்கும், வடமொழிக்கும் இடையே காணப்படும் தலையாய வேற்றுமைகளுள் ஒன்று. சித்திய மொழிகளுடன் திராவிட மொழிகளுக்கு உள்ள ஒப்புமைகளில் இது தலைமையானதாகக் காண்கிறது.

(xii) திராவிட மொழிகள், மங்கோலியம் மஞ்சு, முதலியவை, ஓரளவுக்குப் பிற சித்திய மொழிகள் ஆகிய இவற்றின் தனிப்பட்ட சிறப்புப் பண்புகளுள் ஒன்று இணைப்பு இடப்பெயர்களினிடமாகப் பெயரெச்சங்கள்[2] வழங்குவதாம். இப் பெயரெச்சம் முக்காலங்களிலும் உள்ள வினையெச்சத் துடன் ஆறாம் வேற்றுமை உருபோடொத்த அ-என்னும் சாரியை பெற்று வந்தது ஆகும். திராவிட மொழிகள் எதனிலும் இணைப்பு இடப்பெயர் என்பதன் நிழல்கூடக் காணப்படவில்லை. கோண்டு மொழியில் மட்டும் வினையெச் சங்கள் இல்லாமல், ஒழிந்துபோனதை ஒட்டி, ஹிங்கி மொழியின் இணைப்பு இடப்பெயர் கையாளப்பட்டு வருகிறது.

(xiii) திராவிட மொழிகளிலும், சித்திய மொழிகளிலும் தழுவு மொழிகளும், தழுவு தொடர்களும் தழுவப்படும் மொழிக்குப் பின்னதாகவே வருகின்றன. இந்து - ஐரோப்பிய மொழி இனத்தில் அவை பொதுவாக முன்வருகின்றன. எனவே, இம் மொழிகள் அனைத்திலும் வாக்கியத்தின் முதலில் எழுவாயும், முடிவில் பயனிலையும், எழுவாய் அடை[3] எழுவாய்க்கு முன்னும், இடையில் செயப்படுபொருளும்


  1. Conjunctions
  2. Relative Pronouns
  3. Adjuncts