பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

25


'தனி உதையை' இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றார்கள்.

அ) மறைமுகத் தனி உதை (Indirect Free-Kick)

கீழே காணும் தவறுகளைச் செய்தால், உடனே, ஆட்டத்தை நிறுத்துவதுடன், 'மறைமுகத் தனி உதை' யை குற்றம் செய்வதற்கு எதிராகத் தந்து அந்த வாய்ப்பை நிகழ்த்துவதற்கு எதிர்க் குழுவை அழைப்பார் நடுவர்.

1) ஒரு தாக்கும் குழு ஆட்டக்காரர் (அடுத்தவர் பகுதியில்) அயலிடத்தில் (Off-Side) நிற்றல்.

2) கையில் பந்தைப் பிடித்ததற்குப் பிறகு, நான்கு தப்படிகளுக்கு (Steps) மேல் எடுத்து வைத்து, இலக்குக் காவலர் நடந்து செல்லுதல்.

3) எதிர்க் குழுவினர், இலக்குக் காவலரின் கையில் (வசத்தில்) பந்து இல்லாத பொழுது, அவரை மோதியோ, இடித்தோ தாக்குதல்.

4) உள்ளெறிதல், தனியுதை எடுத்தல், ஒறு நிலை உதைத்தல் போன்ற வாய்ப்புப் பெற்று ஆடுவோர், பிறர் பந்தை விளையாடுவதற்கு முன்னர், தானே இரண்டாம் முறையாகத் தொடர்ந்து விளையாடுதல்.

5) ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்புப் பெற்ற ஒருவர், இலக்கை நோக்கிப் பந்தை உதைக்காமல் வேறுதிசை நோக்கி உதைத்தல்.

6) ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே அபாயகரமான நிலையில் ஆட எத்தனித்தல்.