பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
27
 

6) காலை இடறிவிடுதல் (Tripping).

7) வேண்டுமென்றே ஆளின் மேல் எகிறி விழுதல், ஏறிக் குதித்தல்.

8) ஆட்ட நேரத்தில் பந்தைக் கையால் தடுத்து நிறுத்துதல், தாக்குதல், தள்ளுதல், அடித்தல்.

9) பந்தாடிக் கொண்டிருக்கும் எதிர்க் குழுவினரை முன்னால் வந்து தடை செய்து தாக்கித் தடுத்து ஆடாமல், பின்னால் வந்து அவர்களைத் தாக்குதல், மோதித் தள்ளுதல்.

குற்றங்களுக்குரிய தண்டனையாக, நடுவர் நேர்முகத் தனியுதையை எதிர்க் குழுவினருக்கு அளிக்க, இதன் மூலம் அவர்கள் பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியும்.

9. ஒறுநிலை உதை (Penalty-Kick)

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண. நன்னயஞ் செய்துவிடல்” என்ற குறளில் வரும் ஒறுத்தல் எனுஞ் சொல்லுக்கு, தண்டனை எனும் பொருள் உண்டு. மீண்டும் அவர் இதுபோல் தவறு செய்யக் கூடாது என்பதற்காகவே தண்டித்து நன்னெறிப்படுத்துவது போல, தடுக்கும் குழுவினர்கள் தாங்கள் செய்த குற்றத்திற்காக, ஒறுநிலை உதையைத் தண்டனையாகப் பெறுகின்றார்கள்.

ஒறுநிலைப் பரப்பிற்குள் (Penalty-Area) ஒறுநிலை உதையை நிறைவேற்றும் முறையை இனிக் காண்போம்.

எல்லா ஆட்டக்காரர்களும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே நின்று கொண்டிருக்க, தடுக்கும் குழுவைச்