பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30
கால் பந்தாட்டம்
 

பந்தைக் கையால் தொடுவதும், பிடிப்பதும், எறிவதும் தூக்கிச் செல்வதும் போன்ற செயல்களால் பந்து இலக்கினுள் சென்றால், அது வெற்றி எண் அல்ல. அது தண்டனைக்குரிய தவறுகளாகும்.

நேர்முகத் தனியுதையால், ஒறுநிலை உதையால், முனை உதையால் பந்தை நேராக இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியும். மறைமுக தனி உதையால் பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியாது. ஆடுகின்றவர்களில் யாராவது ஒருவர் விளையாடிய பிறகே, பந்து இலக்கினுள் சென்றால்தான் அது வெற்றி எண்ணைத் தரும்.

ஆட்ட இறுதியில் அதிகமான வெற்றி எண்களைப் பெறுகின்ற குழுவே வெற்றி பெற்றதாகும். இரு குழுக்களும், வெற்றி எண்களை சமமாகப் பெற்றிருந்தாலும், அல்லது வெற்றி எண்களே பெறாமல் இருந்தாலும் இறுதியில் யார் வெற்றி பெறுகிறார் என்பதனைக் கணிக்க புது விதி தற்பொழுது புகுத்தப் பட்டிருக்கிறது.

ஆட்டத்தைக் கண்காணிக்கும் நடுவர், இரு இலக்குகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். ஒவ்வொரு குழுவிற்கும் 5 ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பினை வழங்குவார். அதை ஒரு குழு மாற்றி ஒரு குழுவாக, மாறி மாறி உதைத்து ஆட வேண்டும்.

யார் நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகின்றாரோ, அவரின் குழுவே முதலில் ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பைப் பெறும்.

ஆட்டம் முடியும் பொழுது, இரண்டு குழுக்களிலும் யார் யார் இருந்து விளையாடிக் கொண்டிருந்தார்களோ,