பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

45


பந்துக்காக முன்னால் ஓடிப்பிடிக்க வேண்டும்? எப்பொழுது இலக்குக் கம்பத்திற்கு மேல் பந்தைக் குத்திவிட வேண்டும் என்பனவெல்லாம் அனுபவத்தின் மூலமே கிடைக்கக்கூடிய திறன் நுணுக்கங்களாகும். புரிந்து கொண்டு ஆட வேண்டும்.

பாய்ந்து வரும் எதிராளியை முன் சென்று தாக்குவதும், தன்னை மீறி தலைக்கு மேலே பந்து இலக்கிற்குள் போகாதவாறு பார்த்துக் கொள்வதும் போன்ற முன் கூறிய செயல்களுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஒரிடத்தில் நின்று கொண்டிருப்பது மிக முக்கியமானதுதான் என்றால், அது எந்த இடம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

அந்த ஓர் இடத்தை, விளையாடி விளையாடி, அதனால் விளைந்த பயிற்சியின் மூலமே தான் தீர்மானிக்க முடியும். முதிர்ந்த அனுபவத்தினால் பெற்றுவிடக்கூடிய அந்த இடத்தைப் பெரிய பெரிய ஆட்டக்காரர்கள் ஆடும் பொழுது, அவர்கள் எவ்வாறெல்லாம் இலக்குப் பரப்பிற்குள், ஒறுநிலைப் பரப்பிற்குள் இயங்கு கின்றார்கள், சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு ஆடுகின்றார்கள் என்பதை உணர்ந்து ஊகித்தறிந்து கொள்ளல் வேண்டும்.

ஆடுகளமும் ஆட்டமும்

விளையாடுகின்ற ஆடுகளத்தைப் (மைதானம்) பொறுத்தே பந்து, குதித்தெழும்பும் தன்மையில் மாறுபடும். வேறுபடும். தரை பாறையாக இருக்கும். சில களங்களில் பசும்புல் தரையோடு இருக்கும். சில நிலங்கள் பதமாக இருக்கும். சில சிறிதளவு நீர் பட்ட உடனேயே சேற்றுத் தளமாகவும், சில மணற் பகுதி உள்ளவையாகவும் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில்