பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
கால் பந்தாட்டம்
 

மைதானத்தின் தரைக்கேற்ப, ஆட்ட முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கல் போன்ற கட்டாந்தரை என்பார்களே, அந்த இடத்தில் பந்து பட்ட உடனேயே அதிகமாகக் கிளம்பும். ஆகவே, பந்து கிளம்புவதற்குள் பிடித்தாடுவது நல்லது. அது கிளம்பி மேலே வந்த பிறகு பிடித்துக் கொள்ளலாம் என்றால், பந்து எந்தப் பக்கம் சுழன்று கிளம்பும் என்பது இலக்குக் காவலருக்கே புரியாத நிலைக்குக் கொண்டு வந்துவிடும். கீழே விழுந்து பிடிக்க முடியாததால் கடினத் தரைக்கேற்ப, கவனத்துடன் பந்தைப் பிடிக்க வேண்டும்.

ஈரத் தரையிலே ஆடும்போது, பந்து வழுக்குமே! ஆகவே, கையுறையுடன் நின்று பந்தைப் பிடிக்க வேண்டும். கையுறைங்கூட, பந்து நழுவுவதற்குரியதாகி விடும் என்பதால், வருகிற பந்தை முடிந்த வரை கையால் குத்தி அனுப்பிவிடுவதே சிறந்த முறையாகும்.

கையால் பிடிக்கும்போது, நழுவிவிடும் என்பதால், உடலையும் மறைப்பாக வைத்து, உடலோடு பந்தை சேர்த்துப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

முனை உதையின் போது

முனை உதையென்றால், நிச்சயம் வெற்றி எண் கிடைத்துவிடும் என்று மக்கள் நினைத்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் முடியாதா என்றால், சில நேரங்களில் தான் வெற்றி எண் பெற முடிகிறது. குறிப்பாக, இலக்குக் காவலர் திறமையுள்ளவராக இருந்தால், உதைபட்டு வரும் பந்தைத் தடுக்கலாம். தாக்கி அனுப்பலாம் அல்லது தாவிப் பிடித்துக் கொள்ளலாம். நன்கு உயரமுள்ள, எதிர்த்துத்