பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
 முன்னுரை


கால் பந்தாட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று கனவு கண்டு, விளையாடத் துணிவின்றி, ஆடுகளத்திற்கு வெளியிலே நின்றுகொண்டு பார்வையாளர்களாகவே வீற்றிருக்கும் ஆர்வமுள்ள வாலிப அன்பர்களுக்கு, எனது நூல் ஓர் உணர்ச்சி மிகுந்த உற்சாகத்தை ஊட்டி ஆடி மகிழத் தூண்டும். துணை செய்யும்.

“ஆடுகளத்தில் இறங்கி இந்நாள்வரை ஆடுகின்றோம்! ஆட்டத்தில் திறமை வளரவில்லையே. இன்பம் மலர வில்லையே” என்ற மனதிற்குள்ளேயே மயங்கி வழியறியாது விளையாடும் இளைய நண்பர்களுக்கு, இந்நூல் வளமான வழிகாட்டியாக அமையும்.

“கால்பந்தாட்டத்தில் என்ன இருக்கிறது” என்று கேலியாகப் பேசி போலியாக வாழும் “பெருஞானப் பண்பாளர்கள்” அனைவரும் இந்நூலைப் படித்த பிறகு, “இவ்வளவு சிறப்பும் செழிப்பும் இதில் இருக்கிறதா” என்ற உண்மை நிலை புரிந்து, ஆட்டத்தைப் பார்த்துப் பழகி அனுபவித்து மகிழவும், காப்பாளர்களாகத் திகழவும் ஆவன செய்யும். மேவிடச் செய்யும். நம்பிக்கையின் நிறைவில்தான் கால் பந்தாட்டம், நல்ல நூலாக வெளிவருகிறது.