பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கால் பந்தாட்டம்


எங்கு நடந்தாலும் ஓடினாலும், எங்கே நிற்க வேண்டும் என்று ஓர் இடத்தைக் காத்து நிற்பதோடு, கடைக் காப்பாளர்களோடு கலந்து ஆலோசித்துப் பேசி முடிவு செய்துகொண்டு, யார் யார் எப்படி எப்படியெல்லாம் வந்தால் எவ்வாறெல்லாம் சமாளிக்கலாம் என்ற ஒத்துழைப்போடு ஆடுவது நல்ல பலனையே நல்கும்.

பயிற்சிகள்

கைப்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம் போன்ற ஆட்டங்களில் பங்கு பெற்று ஆடுவதன் மூலம், உடலானது ஏற்றவாறு நெகிழுந்தன்மையை, வளைந்து செயல் புரியும் தன்மையைப் பெறலாம்.

தினந்தோறும் உடலழகுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நின்று கொண்டிருந்து திடீரென்று ஒடுதல், பிறகு நிற்றல், அப்படியே கைகளை தரையில் ஊன்றியவாறு விழுதல் (DIVE) போன்றவற்றைத் தினமும் பழக வேண்டும்.

ஓட்டப் பந்தயத்திற்கேற்ற உடலாண்மை நிகழ்ச்சிகளில் (Athletic training) செய்யும் பயிற்சிகளுடன், உயரத் தாண்டுதல், கயிறு தாண்டிக் குதித்தல் முதலியவற்றில் ஈடுபட்டுத் திற நிலையில் உடலைத் தரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பந்தைக் கம்பத்தில் மோதியோ, அல்லது சுவற்றில் மோதி எதிர்த்து வரச் செய்தோ, பந்தைப் பிடித்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, பல போட்டி ஆட்டங்களைப் பார்த்து சூழ்நிலையைப் புரிந்து கொள்வதுடன், தவறான தனது