பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கால் பந்தாட்டம்


இலக்குக் காவலரால், இலக்கு முழுவதையும் பார்த்துக் கொள்ள முடியாது. அவரது கைக்கு எட்டாத இடைவெளிப் பகுதியைக் கடைக்காப்பாளர்கள் கண்காணித்துக் காத்துக் கொள்வதுதான் முறையாகும்.

வருகின்ற முன்னாட்டக்காரர்களின் வேகத்திற்கு எதிர்த்தாக்குதல் தருவதுதான் இவர்கள் பணி. பந்துடன் ஒருவராகவும் வரலாம், மூன்று நான்கு பேராகவும் வந்து தாக்கலாம். அந்த முற்றுகையின்போது, யாரைப்போய் தடுப்பது, எங்கே போய் நிற்பது என்று பேதலிக்கும் உணர்வும், பதறிப்போகும் சூழ்நிலையும் உருவாகலாம்.

எதிர்க்குழு மைய முன்னாட்டக்காரரை (Center Forward) எப்படியும் மடக்குதல் வேண்டும். மற்றும் தன் பாங்கருக்கு, பந்தை சாதகமாகவும், சரியாகவும் வழங்குவதற்கு அவரே முழுப் பொறுப்பாளராகவும் இருப்பதால், எதிராளிகளைத் தடுத்தாட வேண்டியது மிகவும் முக்கியம்.

இலக்குக் கோட்டுக்கு அருகிலேயே நிற்பதோ, இலக்குக் காவலரை மறைப்பதுபோல் நிற்பதோ கூடாது. அதுபோன்ற சமயத்தில், காவலரிடம் கலந்து பேசி முடிவு செய்து கொண்டு, ஆட வேண்டும்.

வருகிற பந்தை ஒரே உதையில் இலக்குப் பகுதியிலிருந்து அனுப்பிவிட்டால் போதும் என்ற ஓர் திருப்தியுடன் மட்டுமே ஆடக்கூடாது. தன் கடமை தீர்ந்துவிட்டது என்று சோம்பலுணர்வும் கொள்ளக்கூடாது. அதுபோலவே, தான் உதைத்தாடும் பந்தானது, தனது குழு ஆட்டக்காரர்களுக்கு ஆடுவதற்குக் கிடைப்பது போல் அனுப்பித் தந்தால்தான், தனது முன்னாட்டக்காரர்கள் பந்துடன் முன்னேறிச் சென்று,