பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

51


எதிர்க்குழு இலக்குப் பகுதியைத் தாக்க இன்னும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.

வருகின்ற எதிர்க் குழு ஆட்டக்காரர்களை வலிமையுடனும் ஒர் உறுதிப்பாட்டுடனும் தடுக்க வேண்டும் என்றால், "எங்கே முடியப்போகிறது. எதிரிகளிடம் நிச்சயம் ஏமாந்து விடுவேன்” என்ற தாழ்வு மனப்பான்மையுடனும், அரை மனதுடனும் ஆடவே கூடாது. ஆகவே, பந்து யாரிடம் உள்ளதோ அவரிடம் சென்று தடுத்தாட வேண்டுமே ஒழிய, வெறுமனே நிற்கும் ஆளைப்போய் தடை செய்யக் கூடாது.

கடைக் காப்பாளர் இருக்கக் கூடிய இடம் மிகவும் இக்கட்டான இடம். கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும், குற்றம் செய்தவராகக் (Intentional Foul) கருதப்பட்டு, ஒறுநிலை உதைத் தண்டனையைப் பெறக்கூடும். கைகளில் பந்து பட்டு விட்டாலுங்கூட, அதற்கும் அதே தண்டனைதான். ஆகவே, எச்சரிக்கையுடனும், அதிக விழிப்புடனும் விளையாட வேண்டும்.

கடைக்காப்பாளர்களுக்கு, தங்கள் பகுதியை விட்டு, எதிர்ப்புற ஆடுகளப் பகுதிக்குள் பந்துடன் ஒடி ஆடுகின்ற வாய்ப்பும் வசதியும் சில சமயங்களில் ஏற்படும். அந்த வாய்ப்புக் கிடைத்துவிட்டதே என்று கருதி முன்னேறிச் சென்று, தன் காவலிடத்தைக் கோட்டை விட்டுவிடக் கூடாது.

கடைசியாக, கீழ்வரும் குறிப்புக்களைக் கடைக் காப்பாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். தன் ஆடுமிடம் பற்றிய தகுந்த கடமையுணர்வும், தன் பாங்கர்களை ஊக்குவித்து, இடம் காட்டி ஆடச் செய்து, அவர்களோடு இவ்வாறுதான் ஆட வேண்டுமென்று