பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
கால் பந்தாட்டம்
 

பொதுவாக, எதிரிகள் தம்மை சூழ்ந்திருக்கும்போது வருகிற உயரமான பந்தைத் தலையாலே இடித்து, தன் பாங்கருக்குத் தருவதுபோல் ஆடுவது சிறந்த பண்பாகும். அதுவே திறமையுமாகும்.

மைய இடைக் காப்பாளரின் கடமையை சிறிது விளக்குவோம். எதிர்க் குழுவின் மைய முன்னோட்டக்காரர் எப்படியாவது இவரை ஏமாற்றிப் பந்தை முன்புறம், கொண்டு சென்று விடவேண்டும் என்றே இறுதிவரை முயற்சிப்பார். இடைக்காப்பாளர் இவ்வாறு ஏமாறுகிற பொழுதெல்லாம், அவரது இலக்குத் தாக்கப்படுகிறது, பந்து இலக்கை நோக்கிக் குறிபார்த்து உதைக்கப்படுகிறது என்பதே உண்மை.

இதை உணர்ந்து கொண்டிருக்கும் மைய இடைக்காப்பாளர் என்ன செய்ய வேண்டும் என்றால், எக்காரணத்தை முன்னிட்டும், பந்துடன் தன்னைத் தாண்டி முன்னே (இலக்கை நோக்கி) செல்லாதவாறு, தடுத்தாட வேண்டும். இவரைத் தாண்டிப் பந்து கடக்காமல், பக்கவாட்டில் சென்றால்கூட பாதுகாப்பு உண்டு. நேரே நடு மத்தியில் இவ்வாறு விடுகின்ற கோட்டையானது, அவரது குழுவையே ஆட்டங்கண்டு விடச் செய்யும்.

இடபுறமும் வலப்புறமும் ஆடுகிற இடைக்காப்பாளர்கள், உட்புற முன்னாட்டக்காரரைக் (Left wing, Right wing) குறிபார்த்துச் சரியாக நின்று தடுத்தாட வேண்டும். பந்து தன் பக்கம் வருகிறபோது மட்டுமே பாய்ந்து தடுத்தாடினால் போதும் என்று வாளா இருக்காமல், மறுபக்கத்தில் பந்து ஆடப் பெறும் வேளையிலும் அசட்டையாக இருந்துவிடாமல், தன்