பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
57
 

தருவதுடன், ஆட்டத்திலே உள் குழப்பத்தையும் உண்டு பண்ணிவிடும். அவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கால் பந்தாட்டம் என்பது பலர் ஒன்று கூடி, நினைவால், செயலால் ஒன்றுபட்டு ஆடுகின்ற குழு ஆட்டமாகும். அதனுள் சுயநலம் புகுந்துவிட்டால், ஒற்றுமை உடைந்துவிடும். வெற்றி நிலைமை வீழ்ந்து போகும். அதனால், ஆடுவோரே தமது நிலையுணர்ந்து, கலையறிந்து, திறமைகளைக் குழுவுடன் இணைத்து ஆடினால்தான் ஆட்டம் சிறக்கும். களிப்பிலும் ஆழ்த்தும். அதுவே, அன்பு மிகுந்த நண்பர்களையும், அருமை நிறைந்த ரசிகப் பெருமக்களையும் ஆதரவாக திரட்டிக் கொடுக்கும். வளர்க்கும்.

5. முன்னாட்டக்காரர்கள் (Forwards)

எதிர்க்குழுவின் கடைக்காப்பாளர்கள், இடைக்காப்பாளர்களின் தடுத்தாடும் திறமைதனை முறியடித்து, சொல்லற்கரிய இடைவெளிகளை (Gaps) ஏற்படுத்தி, பந்தை லாவகமாக, இலக்குக் காவலரை ஏமாற்றியவாறு உள்ளே தள்ளுகின்ற அற்புதக் கலையை, முன்னாட்டக் காரர்களே நிகழ்த்திக் காட்டுகின்றார்கள்.

அந்த அற்புத வெற்றிக்குக் காரணம் - அவர்களது விரைவோட்டம். ஓடிவரும் வேகத்திலேயே பந்தைக் குறி பார்த்து உதைக்கும் ஒப்பற்ற ஆற்றல் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழே வைத்திருக்கும் அரிய திறனாகும். பசித்த புலி தனது இரையின் மேல் பாய்வதுபோல, பந்தைக் கண்டதும், பாய்ந்து பெற்று விளையாட வேண்டியவர்கள் முன்னாட்டக்காரர்கள்.