பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
 

கற்றவர் நெஞ்சமெல்லாம் கருத்துக்கள் சென்று நிலைக்கட்டும். கட்டிளங்காளையர்கள் ஆற்றல் நிறைந்த கால்பந்தாட்ட வீரர்களாக மாறி, திக்கெட்டும் சென்று தமிழகத்தின் மேன்மையைப் பரப்பட்டும்.

தனி மனிதனாக நான் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் புனித லட்சியங்களின் பிரதிபலிப்புதான் என் நூல்களாகும்.

என் ஆக்கப்பணிகளுக்கு அருளும் பொருளும் தந்து வாழ்த்தி வரவேற்கும் பெருங்குணச் செம்மல் குவாலியரில் உள்ள லட்சுமிபாய் உடற்கல்விக் கல்லூரி முதல்வர் டாக்டர் திரு.எம்.ராப்சன் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும் கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூல் சிறப்புற வெளிவருவதற்கு எல்லா வகையிலும் உதவிய ஆர்.சாக்ரட்டீஸை பாராட்டி மகிழ்கிறேன்.

என் இனிய முனைப்பையும் அரிய உழைப்பையும் போற்றிப் புகழ்ந்து, வாங்கி மகிழ்ந்து, மகிழ்வித்து வரும் பெருந்தகையாளர் அனைவரையும் நன்றிப் பெருக்குடன் நினைக்கிறேன்.

அன்பன்,
எஸ்.நவராஜ் செல்லையா
 

1972-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் வெளியான ஆசிரியரின் முன்னுரை அப்படியே அச்சிடப் பட்டுள்ளது.