பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
கால் பந்தாட்டம்
 

விரைவாக ஓடத் தெரிந்தவர், ஓட முடிந்தவரே, அந்த வேகத்துடனேயே பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள இயன்றவரே முன்னாட்டக்காரராக வரமுடியும். வரவேண்டும். அதுதான் நியதியுங்கூட.

குறுகிய நேரத்திற்குள்ளேயே விரைவோட்டத்திற்குத் தயாராகும் உடல்நிலை. அவ்வாறு அடிக்கடி ஒடினாலும் அயராத உடல் திறம். இவைகள்தான் மெதுவாகத் திரும்பியும் ஒடியும் தடுக்கவரும் எதிர்க்குழு கடைக் காப்பாளர்களை ஏமாற்ற உதவும்.

வந்து கொண்டிருக்கும் பந்தை எங்கே கால்கள் சந்திக்க வேண்டும் என்று கண்கள் சொல்வதை செயல்படுத்தும் கால்களுடன், அதற்காக ஆணையிடும் அரிய முன் யோசனையும் மிகமிக அவசியம். அத்துடன், தானே பந்தை இலக்கிற்குள் அடித்துப் பெயர் பெற வேண்டும் என்ற அடங்காத ஆசையுடன் எப்பொழுதும் ஆடக் கூடாது.

சந்தர்ப்பம் கிடைத்தால் வெற்றி பெற ஆடலாம். தமக்கு அவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்காத பொழுதும், கிடைக்கும் வாய்ப்பில்லை என்றிருக்கின்ற போதும், தானே தனியாக தடித்தனமாக ஆடிக் கொண்டிருக்காமல், தனியே நிற்கும் தனது பாங்கரைப் பார்த்து, அவரிடம் பந்து சென்றால் நிச்சயம் இலக்கினுள் செலுத்த முடியும் என்று இருந்தால், உடனே அவருக்கு வழங்கிவிடுகின்ற பரந்த மனப்பான்மை முன்னாட்டக்காரர்களுக்கு இருக்க வேண்டும்.

மைதானத்தின் மத்தியிலிருந்து இலக்கை நோக்கி உதைக்கும் பந்தானது, சரியாக இலக்குக் காவலரிடம் போகாதவாறு, இலக்கிற்கு முன்னால் குறைந்தது 7