பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

63


6. குழுத் தலைவன் (Captain)

மேற்கூறியவாறு பிரிந்திணைந்து ஆடும் ஆட்டக்காரர்களில் ஒருவர் குழுத்தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார். அவருக்கும் ஆட்டக்காரர்களுக்கும் வேண்டிய அத்தனை திறன் நுணுக்கங்களும் தேவையென்றாலும், அவற்றிலும் இன்னும் பல தகுதிகள் சேர்ந்திருந்தால் குழுவின் புகழுக்கும் கட்டுக்கோப்பான சிறந்த ஆட்டத்திற்கும் மேலும் மெருகூட்டும் என்பதால், குழுத்தலைவருக்குரிய ஒரு சில தகுதிகளையும், பொறுப்புக்களையும் கீழே காண்போம்.

ஆட்டக்காரர்கள் அனைவரிடமும் பாரபட்சமற்ற முறையில் அன்பு செலுத்துவதுடன், ஆதரவு காட்டி ஆட்டத்தில் அவர்களின் மனம் முழு மூச்சுடன் ஈடுபடுமாறு ஆடவைக்கும் அரிய பண்பாற்றல் குழுத் தலைவருக்கு இருக்க வேண்டியது தலையாய பண்பாகும்.

ஆடுகளத்தினுள் நிகழ்கின்ற எந்தவிதமான சூழ்நிலையிலும் அமைதியையும் நிதானத்தையும் இழந்துவிடாமல், ஆத்திரப்படாமல் பிரச்சினைகளை அணுகி முடிவெடுப்பவராகவும் உணர்ச்சி வசப்படாத உறுதியான நெஞ்சம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆட்டக்காரரின் தகுதி, திறமை, ஆடும் பண்பு அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பதுடன், அதற்கேற்ப எதிர்க்குழுவை எவ்வாறு தாக்குவது? மீறி வருகின்றவர்களின் முற்றுகையை எப்படித் தடுப்பது? என்றெல்லாம் உன்னிப்பாக ஆராய்ந்து, ஓர் முடிவெடுத்து, அதை மற்றவர்களோடு பரிமாறி,