பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கால் பந்தாட்டம்


கருத்துக்களில் முரண்பாடில்லாமல் காரியங்கள் ஆற்ற வேண்டும்.

எதிர்க்குழுவினரின் ஆடும் திறம் என்ன? அவர்களின் வழங்கும் தரம் என்ன? அவர்களின் ஒருங்கிணைந்து ஆடும் பலம் எவ்வாறு என்பதை உணர்ந்து, அதற்கேற்ப தாக்கி ஆடவும், வியூகம் அமைத்து, விளையாட்டை நடத்திச் செல்லும் விற்பன்னராகவும் விளங்க வேண்டும்.

விதிகளுக்குக் கட்டுப்படுகின்ற மனமும், தன் குழுவினரையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற திறமும் அவருக்குத் தேவை. அத்துடன் தவறாட்டம் ஆடுவோரை அவ்வாறு ஆடாமல் எச்சரிக்கின்ற தைரியத்துடன் அவர்களை ஆடவைத்துத் தம் குழுவின் பண்பாட்டைக் காப்பாற்றுவதுடன், மேம்பாட்டையும் உயர்த்துவது அவரது கடமையாகும்.

அத்துடன் இன்னும் ஒன்று. ஒரு குழுத் தலைவரது தலைமையை, அக்குழுவில் உள்ளவர்கள் அத்தனை பேரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு செயல்படுகின்ற முறையில், தன் சொல்லாலும், செயலாலும், நடைமுறைப் பழக்க வழக்கங்களில் நல்லவராகவும், ஆட்டத்திறன்களில் வல்லவராகவும் விளங்குதல் வேண்டும்.

உலகம் புகழ்ந்து போற்றி, பொன்னே போல் காத்து, பேரன்புடன் ஏற்றுக் கொண்ட ஆட்டம் கால் பந்தாட்டமாகும். இத்தகைய அரிய ஆட்டத்தை உணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற நீங்கள், தவறில்லாத ஆட்டத்தை ஆட வேண்டும். பெருந்தன்மையுடன் ஆடும் முறைகளை