பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66




4. விளையாடும் விதமும் விதிமுறையும்

ஆடுதற்குரிய சாதனங்கள்

பந்தைக் காலால் உதைத்தாட வேண்டும் என்கிற பொழுது, வெறுங் காலாலும் விளையாடலாம், வேதனையும் சிரமமும் அதில் விளையாடுகின்றன. அதனால், ஒடும்போதும் உள்ளங்கால் தேய்ந்தும், சிராய்ந்தும், இரத்தப் பெருக்காகின்றன என்பதனால், ஆட்டக் காலணி'யை (Boots) அணிய வேண்டும் என்கிறார்கள். அதனால் அனைவரும் அணிந்து ஆடுகிறார்கள். ஆகவே, முதலில் ஆட்டக்காலணியை அணியும் பழக்கத்தை முக்கியமாக மேற்கொண்டு, ஆடிப் பழக வேண்டும்.