பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

67


யார் யார் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நடுவரும், பார்வையாளர்களும் தெரிந்து கொள்வதற்காக, குறிப்பிட்ட வண்ண உடை அணிந்து கொண்டுதான் ஆட வேண்டும் என்ற விதியிருக்கிறது. அத்துடன், ஆட்டக் காலணியை அணிந்து ஆடுகின்ற பொழுது, உடலிலே அடிபடும் என்பதற்காக, தடுப்புச் சாதனங்களும் உள்ளன. ஆகவே, தேகத்தின் பாதுகாப்பிற்குத் தேவையானதை அணிந்து கொண்டு, ஆடுகளத்தில் இறங்கி ஆடுவதே அழகாகவும் இருக்கும். ஆனந்தமான காட்சியாகவும் இருக்கும்.

வண்ண உடையுடனும், வளமான தடுப்புச் சாதனங்களுடனும், தடுப்புக் காலணியுடனும் ஆடுகளத்தில் இறங்கிவிட்டோம். இனி எந்த விதத்தில் விளையாடுவது, எப்படி தொடர்வது என்பது பற்றி ஆராய்வோம்.

2. ஆட்டத்தின் ஆரம்பத்தில்

நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்குகிறது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சிறிதும் அசட்டை யில்லாமல், தாங்களே இறுதியில் வெற்றி பெறுகின்ற வாய்ப்பு இருந்தாலும்கூட, தலைக்கணமும், தானென்ற அகங்காரமும், எக்காரணத்தை முன்னிட்டும் ஆட்டக்காரர்களிடம் தலைகாட்டவே கூடாது.

ஆட்டம் தொடங்கிய உடனேயே, முழு பலத்தையும் வைத்துத் தாக்கி ஆடுவது என்பது ஒரு முறை. எடுத்த எடுப்பிலேயே தங்கள் பலத்தைக் காட்டிவிட்டால், எதிரிகள் தளர்ந்துவிடுவார்கள். அசந்து போய்விடுவார்கள் என்றும், அவர்கள் திகைப்படைந்து