பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
 
பதிப்புரை


விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல்களை எழுதி வெளியிட்டு தமிழுக்குப் புதிய துறையை உருவாக்கித் தந்தவர் என்ற பெருமையோடு, எங்கள் பதிப்பகத்தின் நிறுவனர் என்ற சிறப்பும் டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்களுக்கு உண்டு.

1970இல் எங்கள் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை நூல்களை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பாளர் என்ற சிறப்புடன் தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றும் எங்கள் நிறுவனத்தின் மூலம் டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களை மறு பதிப்பு செய்ய இயலாமல் போனது. தற்போது அனைவருக்கும் பெரிதும் பயன் தரக்கூடிய நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

வழக்கம் போல் வாசகர்களின் நல்லாதரவும் அன்பும் தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறோம்.

நன்றி!

ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ்
பதிப்பாளர்