பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திக்குமுக்காடிப் போவதால், அவர்கள் ஆட்டம் சிறப்பாக அமையாது என்றும் தீர்மானமாகக் கூறுவார்கள் பலர். இந்த ஆட்ட முறையை அக்குழு மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி பெற்றிருந்தால்தான், இறுதிவரை அவ்வாறு ஆட முடியும்.

'முதலில் மெதுவாக ஆடத் தொடங்கலாம். பிறகு, போகப்போக வேகங் காட்டலாம்' என்றும்; எதிர்க் குழுவினர் எப்படி ஆடுகின்றார் என்பதைப் பார்த்துத் கொண்டு, அப்புறம் நாம் சாமார்த்தியத்தைக் கூட்டலாம்' என்பதும் ஒரு கொள்கை.

வெள்ளம் வந்த பிறகு அணை கட்டுவதும், விடுவேகும் போது கிணறு வெட்டுவதும், எதிரிகள் தாக்க ஆரம்பித்ததும் நாமும் பின்னால் தாக்கத் தொடங்கலாம் என்பதும் ஒன்றுதான்' என்றும் சிலர் கூறுவார்கள்.

எனவே, ஆட்டக்காரர்கள் அனைவரும் கூடி, எந்த

முறை தமக்கு ஏற்றது, இயைந்தது என்பதை முடிவு கட்டி, அதன்படியே பயிற்சி செய்ய வேண்டும்.

ஆடுகளத்தில் இறங்கி விளையாடுவதற்கு முன்னரே (Warming up exercise) 2. Léopg5!'. Lu?gb&#606ms& செய்தும், எதிர்க் குழுவினரை இகழ்ச்சி நோக்கோடும் ஏளனத் தோடும் பார்க்காமல், ஆட்டம் முடிகின்ற கடைசி வினாடி வரை, மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் ஆடத் தொடங்க வேண்டும்.

ஒடியும் உடலை இயக்கியும் நன்கு பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நாம் நினைப்பதுபோல, உடலை இயக்கி விளையாட முடியும்.