பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
69
 

இடைவேளையின் போது

முதற்பகுதி (First Half) முடிந்தவுடன், இருக்கின்ற இடைவேளை நேரத்தை வீணே பேசி வீணாக்காமல், குழுவினர் அனைவரும் ஒன்று கூட வேண்டும். எதிரிகளின் ஆட்டமுறை எப்படி? அவர்கள் தாக்கும் முறை, தடுக்கும் முறை எவ்வாறு இருக்கிறது? அவர்களில் யார் யார் சரிவர ஆடவில்லை. அவர்களுக்குரிய கை வராத கலை என்ன? எப்படி அவர்களுடன் ஆடினால் வெற்றி பெற முடியும் என்பதையெல்லாம் திட்டமிட்டுத் தீர்மானிக்க வேண்டும்.

ஆகவே, முதற்பகுதியில் பெற்ற ஆட்ட அனுபவத்தைக் கண்டு, எதிரியின் ஆட்டத் திறமையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற முறையில் இரண்டாம் பகுதி ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

எதிர்க் குழுவினரின் தாக்குதலை எப்படி சமாளிக்கலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. எதிர்க்குழு இலக்கினுள் பந்தை உதைத்துச் செலுத்தினால் தான் வெற்றி எண் பெற்று வெற்றி பெற முடியும். தங்கள் இலக்கை மட்டும் காவல் புரிவதனால் மட்டும் அல்ல என்பதால், எதிர்க்குழு இலக்கை எவ்வாறு தாக்கலாம் என்பதில் தீவிர முயற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

எதிர்க் குழுவினரின் திறக் குறைவு பற்றியும், ஆட்டத்தில் நன்றாக ஆடாதவர்களையும் தெரிந்து கொண்டு, அந்தப் பகுதி பக்கமாகவே ஆடினால், எதிர்க்குழுவினர் தங்கள் பாதுகாப்பைப் பலப் படுத்துவதற்காகத் தடுத்தாட முயல்வார்கள். அதனால்