பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70
கால் பந்தாட்டம்
 

தாக்கும் தன்மை தளரும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எதிர்க் குழுவின் இலக்கினைத் தீவிரமாகத் தாக்கி ஆடுவதுதான் சிறந்த ஆட்ட முறையாகும்.

3. ஆட்ட நேரத்தில் ஆடும் முறை

பந்தை வேகமாக உதைத்தாடுவதுபோல், விறுவிறுப்புடனும் சுறுசுறுப்புடனும் ஆடவேண்டியது மிகமிக அவசியம். எங்கெங்கே ஆள் இல்லாத இடம் இருக்கின்றதோ, எந்தப் பக்கமாகப் பந்தை அடிக்கும் வாய்ப்பும், வழங்க வசதியும் இருக்கின்றதோ, அந்தச் சூழ்நிலையைத் தெரிந்துதான் பந்தை உதைத்தாடி முன்னேற வேண்டும்.

ஆடுகள மைதானத்தையும் அனுசரித்தே ஆடி விடவேண்டும். தரை எப்பொழுதும் போல் இருந்தால் பரவாயில்லை. தரை ஈரமாக இருக்கும்போது, பந்து ஈரம் பட்டு நனைந்து கனமாகிவிடுமே! அதனால் பந்தைக் கடுமையாக உதைக்கவோ, வெகு தூரத்திற்கு உதைத்து வழங்கவோ முடியாது. அது மிகவும் சிரமமான செயலாகும்.

இப்பொழுது, ஆடுகின்ற இரு குழுவினருமே வேதனையுடன்தான் ஆட வேண்டும். ஆகவே, எந்தக் குழு அதிக நேரம் தம் பக்கத்தில் பந்தை வைத்துக் கொண்டும், வழங்கிக் கொண்டும் ஆடுகின்றதோ, அந்தக் குழுவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உண்டு.

அதற்காக, ஆட்டக்காரர்கள் அருகருகே இருந்து கொண்டு, பந்தை ஒருவருக்கொருவர் வழங்கிக் கொண்டு தான் முன்னேற வேண்டும். எனவே, இதுபோன்ற சமயத்தில், பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து