பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
73
 

தனி ஒருவரே பந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போவது எளிது. ஆனால், அதற்கும் அதிகமான சாமர்த்தியம் வேண்டும்.

தூரமாகக் குழுவினரை வைத்துக் கொண்டு பந்தை வழங்கும் முறை மிகவும் ஆபத்தானது. தலையாலிடித்துப் பந்தை ஆடுவதும் தவறாகும். பந்து எதிராளிகளுக்குக் கிடைத்துவிட்டால், அவர்கள் விரைவாகப் பந்தை கடத்திச் செல்ல வழிவகுத்துவிடுமே!

அதனால், எதிர்க்காற்றில் ஆட இருப்பவர்கள் தங்களுக்குள் முன்கூட்டியே பேசி, தாக்கும் வழிகளை கடைபிடித்து, ஆட்டமுறையை மாற்றிக் கொண்டு ஆட முயற்சிப்பதே அறிவுடமையாகும்.

4. தாக்கி ஆடும் முறை (Attack)

எதிர்க்குழு காத்திருக்கின்ற இலக்கினைச் சுற்றி இருந்து கொண்டு, அடுத்தடுத்துத் தொடுகின்ற தாக்குதல்களினால்தான், எதிர்க் குழுவைத் திணறடிக்க முடியும். திண்டாடச் செய்ய முடியும். அவர்கள் என்ன செய்வதென்று திகைப்படையும் வேளையில், பந்தை இலக்கினுள் அடிக்க முயல்வதைத் தான் தாக்கி ஆடுதல் என்கிறோம்.

இவ்வாறு தாக்கி ஆடும் கலை என்பது தனிப்பட்ட ஒருவரது ஆற்றலையும் துணிவையும், சமயத்திற்கேற்றவாறு செயல்படுகின்ற மனவளத்தையும் பொறுத்தே அமையும்.

தனி ஒருவராகச் சென்று, பந்தை இலக்கிற்குள் அடிக்கலாம். ஒரே குழுவைச் சேர்ந்த பலர், எதிர்க்குழு இலக்கை முற்றுகையிடுவதுபோலச் சென்று, தாக்கி