பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கால் பந்தாட்டம்


பந்தைப் பிடிக்காமல் தேக்கும் காவலருக்கு, தூர இருந்தே பந்தை உதைத்தாடலாம். அவர் தேக்கும் பொழுது, அருகில் ஒடிகாலால் தட்டி விட்டுவிட்டு, தாக்கி ஆட முயற்சிக்கும் வாய்ப்பிருக்கிறதல்லவா?

இனி, எவ்வாறெல்லாம் பந்தை இலக்கினுள் அடிக்க முடியும் என்பதையும் காண்போம்.

பந்துடன் ஒடி வந்து கொண்டிருக்கும் பொழுதே ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியேயிருந்தபடியே இலக்கிற்குள் பந்தை அடித்தல்.

இலக்கிற்கு முன்புறம், சற்று மேலாகவும் உயரமாகவும் போவதுபோல பந்தை அனுப்பி, அதைத் தன் சக ஆட்டக்காரர்களைத் தலையாலிடித்துப் பந்தை இலக்கிற்குள் அனுப்புதல்.

இலக்குக் காவலன் இருக்குமிடத்திற்கும், இலக்குக் கம்பத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியே (Gap) அறிந்து கொண்டு, அதனுள் பந்து செல்லுமாறு உதைத்தாடுதல்.

சில சமயங்களில் பந்துடனேயே இலக்கினுள் புகுந்துவிடுதல்.

உயரமாக வரும் பந்தை முன் நெற்றியால் தேக்கி இலக்கினுள் செலுத்திவிடுதல்.

எனவே, தாக்கி ஆடும் ஆட்டக்காரர்கள் ஒரு குறிப்பை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்குழுவினரின் ஒறுநிலைப் பரப்பின் வெள்ளைக் கோட்டைப் பந்து கடக்க ஆரம்பித்த உடனேயே இலக்கை நோக்கிப் பந்தை வலிமையாக உதைத்துவிட வேண்டும்.