பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
77
 

எத்தனை முறை இப்படிச் செய்யலாம் என்றால் எப்பொழுதெல்லாம் பந்து ஒறுநிலைப் பரப்பின் எல்லைக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் இது போல்தான் செய்ய வேண்டும்.

முன் பாதத்தால் (Toe) இலக்கின் ஒரு மூலையைப் பார்த்து உதைத்தாடும் பொழுது இலக்கினுள் பந்து போனாலும் போகும் அல்லது கம்பத்தின் மீது மோதித் திரும்பினாலும் திரும்பும். அப்பொழுது வேறொரு தாக்கும் குழு ஆட்டக்காரர் முன்னேறிப் பாய்ந்து சென்று ஆட வாய்ப்பும் வசதியும் அங்கு ஏற்படும்.

ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே பந்து இருக்கும் போது, தாமதமாகவோ அல்லது குறியின்றியோ அல்லது தடுமாற்றமாகவோ அல்லது பந்து தன் வசமில்லாத நிலையிலோ அல்லது ஒழுங்கற்ற வழங்குத லினாலேயோ, பந்தை இலக்கினுள்ளே அடிக்கவே முயலக் கூடாது.

யார்? எங்கே? எப்பொழுது?

கடைக்காப்பாளர் தனது இலக்குப் பரப்பில் இருந்து தனி உதை வாய்ப்புப் பெற்று உதைத்தாடிய பந்தை, அந்தப் பகுதியிலுள்ள இடைக்காப்பாளர் (Half Back) முன்னே ஓடி வந்து, தேக்கி நிறுத்தியோ, தலையால் இடித்தோ தன் குழுவின் முன்னாட்டக் காரர்களுக்கும், குறிப்பாக வெளிப்புற முன்னாட்டக்காரர்களுக்கும் வழங்கி ஆடச் செய்ய வேண்டும். பந்தைப் பெற்ற வெளிப்புற ஆட்டக்காரர், எதிர்க்குழு கடைக்கோடு வரை கொண்டு சென்று, அங்கிருந்து இலக்கை நோக்கி உதைத்தாட வேண்டும்.