பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80
கால் பந்தாட்டம்
 

ஆட்டத்திற்கு இம்முறை எடுபடாது ஒத்துவராது என்றும், இரண்டு இடைக்காப்பாளர் களுக்குப் பதிலாக மூவர், ஐந்து முன்னாட்டக்காரர்களுக்குப் பதிலாக நால்வர் போதும் என்றும் கூறுவர்.

மூன்று கடைக்காப்பாளர்கள் என்கிறபோது, நடுவிலே உள்ள கடைக்காப்பாளர் சில சமயங்களில் மைய இடைகப்பாளராகவும்; மைய இடைக் காப்பாளராகப் பணியாற்றுவோர் மைய முன்னாட்டக்காரராகவும் பணியாற்றுவார்.

இதை 3, 3, 4 என்ற அமைப்பில் ஆடி, தாக்கும் பணியையும், தடுக்கும் பணியையும் மாற்றி மாற்றி ஆடலாம் என்று புதிய பாணியில் ஆடுகின்றார்கள். இதற்குப் பயிற்சியும், மனம் விட்டுப் பேசி எடுக்கின்ற முடிவும், திறமும் மிகமிக அவசியம்.

ஒவ்வொரு குழுவிலும் அதில் உள்ள ஆட்டக் காரர்களுடைய தனிப்பட்ட ஆட்டத் திறமை, ஓட்டத் திறமைக்கேற்ப ஆட்ட முறையே மாறும். பந்தாடும் விதமும் மாறும். ஆகவே, மேலே கூறியுள்ள முறை பொதுவான முறை. மேலும் திறமைகளை விரித்துக் கொள்ள விரும்புவோர் அதிகப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

இனி தடுத்தாடும் முறையைக் கவனிப்போம்.

4 தடுத்தாடும் முறை

தனித்தனியாக ஒரு ஆளுக்கு ஒரு ஆள் (Man to Man) என்று தமக்குள் நிர்ணயித்துக் கொண்டு அவர்களைக் கண்காணித்தவாறு ஆடுவது ஒரு வகை ஆட்டம்.