பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
81
 

தற்போது பல குழுக்கள் ஏற்றுக்கொண்டு ஆடி வருகின்ற மூன்று கடைக்காப்பாளர் முறையில், முன்னேறித் தாக்கி ஆடும்போது எல்லோரும் ஒருங்கிணைந்து முன்னேறி, பிறகு பந்து தங்கள் பகுதிக்கு வருகின்ற பொழுது, எல்லோரும் தடுக்கும் ஆட்டக்காரர்களாகக் கீழிறங்கி வந்து ஆடுகின்ற முறையை நவீன முறை என்பர்.

திடீரென்று முன்னேறி, பந்துடன் எதிர்க்குழு இலக்கைத் தாக்குதல், பிறகு உடனே கீழிறங்கி வந்து தமது இலக்கைக் காத்துக் கொள்ளுதல் - இவ்வாறு எல்லா இடங்களுக்கும், எல்லா பகுதிகளுக்கும் ஓடிச் சென்று ஆடி, மீண்டும் தனது இடத்திற்கு வந்து காத்து நின்று ஆடுவதற்கு உடலில் எவ்வளவு வலிமை, சக்தி தேவைப்படும்?

ரஷியர்கள் குழுவில் உள்ள அத்தனை ஆட்டக்காரர்களும் அவர்களுக்கான ஓரிடத்தை வைத்துக் கொள்ளாமல், தாக்குகின்ற நேரத்தில் அனைவரும் தாக்கி, தடுக்கின்றபோது அனைவரும் தடுத்தாடுகின்றனர். இப்படி சூழ்நிலைக்கேற்ப அவர்கள் தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டு ஆடுவதால் எதிர்க்குழுவினருக்கே யாரைக் காக்க வேண்டும். எவ்வாறு தாக்க வேண்டும் என்று முடிவுக்கு வராமல் குழம்பிப் போய்விடுகின்றனர் என்றும் கூறுவர்.

அவர்களுக்குள் பந்தை வழங்கும் முறையில் பக்குவமும், பரிபூரணக் கட்டுப்பாடும் இருப்பதால், தவறான வழங்கு முறை தவிர்க்கப்படுகிறது. இதனால், சக்தியை விரயமில்லாமல் செலவழித்து ஆடுகின்ற தன்மையில், முழு நேரமும் முழு மூச்சுடன் ஓடி ஆட