பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கால் பந்தாட்டம்


யாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்ளாமல் ஆடுவதேயாகும்.

பார்வையாளர்கள் விளையாட்டு நேரங்களில் பதட்டப்படுகின்றார்கள். பந்தாட்டக் களத்திலே பாய்ந்து விடுகின்றார்கள். நடுவராகப் பணியாற்றுகின்றவர்களைச் சாடி விடுகின்றார்கள். கூச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி, பெரிய பரபரப்பையே உண்டுபண்ணி விடுகின்றார்கள் என்றால், அதற்கும் இந்த விதி தெரியாத் தன்மையும் ஒரு காரணமாகவே அமைகின்றது.

என்றாலும், ஆடும் நேரத்தில் பார்வையாளர்களை பேரின்ப நிலையில் நிறுத்தி வைக்கவும், ஆட்டம் முடியும் வரை ஓர் ஆனந்தமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கவும் கூடிய சக்தியை, திறன் நுணுக்கங்களில் தேர்ந்த ஆட்டக்காரர்களே மிகுதியாகப் பெற்றிருக்கின்றார்கள்.

ஆகவே, அத்தகைய அரிய தேவைகளில், திறன்களில் தேர்ந்திருப்பது சாலச் சிறந்ததாகும்.

தங்களுக்குரிய இடம் எது என்று தேர்ந்தெடுத்துக் கொள்வது; தன்னிடமுள்ள பந்தை பாங்கருக்கு வசதியான முறையில் வழங்குவது; அவரை முன்னேறச் செய்ய ஊக்குவிப்பது; காற்றடிக்குங் காலத்தில் பந்தைக் கணித்தாடும் அனுபவத்தில் திளைப்பது; எந்தச் சூழ்நிலையிலும் குழு வெற்றிக்காகவே உழைப்பது: தனக்கும், தன்னுடன் ஆடுகின்ற அத்தனை பேருக்கும் எந்தவிதமான இடையூறோ அல்லது காயங்களோ ஏற்படாமல் ஆடுவது; நான் என்ற நிலை மறந்து, நாம் என்ற உண்மையை உணர்ந்து, குழு ஒற்றுமையைப் பெருக்கி ஆடுவது; விளையாட்டை விளையாட்டுக் கென்றே ஆடி, வேதனைப்படாமல், விரும்பி ஆடுவது