பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

85


போன்றவை ஒரு ஆட்டக்காரரின் அடிப்படைத் தேவைகளாகும்.

ஆகவே, ஆடுகளத்தில் உழைப்பு, பந்துடன் ஒடும் விளையாட்டு அமைப்பு, ஆட்டத்தில் ஆர்வமிழக்காமல் ஆவேசப்படாமல் ஆடும் அன்பு உணர்வு, வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலையில்லாது இறுதிவரை இனிய பண்புகளுடன் ஆடுதல் போன்ற குணங்கள் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் தேவையான பண்புகளாகும்.

இந்த அரிய குணங்களை வளர்த்துக் கொண்டபின்,ஆட்டத்திற்குத் தேவையான திறன் நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

2. பந்தை நிறுத்தி ஆடுதல் (Stopping)

எதிர்க்குழுவினரால் எத்தப்பட்டு வருகிற பந்து அல்லது தன் குழுவினரால் தனக்கு வழங்கப்படுகின்ற பந்து அதனை நிறுத்துதல் என்பதுதான் தலையாய திறன் நுணுக்கமாகும்.

அவ்வாறு பந்தை நிறுத்திய பிறகு தானே, அடுத்தக் கட்டமாக, இருக்கும் பந்தை முன்னுக்குக் கொண்டு போதல், அல்லது பந்துடன் ஒடுதல் அல்லது இலக்கை நோக்கிப் பந்தை உதைத்தல் போன்ற காரியங்களை உருப்படியாகச் செய்ய முடியும். ஆகவே, பந்தை நிறுத்தும் திறமையையே முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

இது கால்பந்தாட்டம் என்பதால், வருகின்ற பந்தையெல்லாம் கால்களினால் மட்டுமே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதோ, கால்களினால்தான் ஆட