பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
கால் பந்தாட்டம்
 

தனக்கு வருகின்ற பந்து கீழாகவோ, மேலாகவோ, தரையோடு தரையாகவோ வந்தாலும், தடுத்தாடுதற்குப் பந்தைக் கட்டுப்படுத்தி ஆடும் திறமையும், விரைவான நினைவும், முடிவான செயலும் முக்கியத் தேவை களாகும். முயன்றோர் வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள். நீங்களும் பெறலாமே!

4. பந்தை பாங்கருக்கு வழங்கல் (Passing)

பந்து தனக்குக் கிடைத்த உடனேயே, தனது சூழ்நிலை அறிந்து ஆடுவதுதான் அறிவுடமையாகும். பந்து தன்னிடம் வந்து சேர்ந்ததும், பந்து தனக்கே சொந்தம் என்று எண்ணிக் கொண்டதுபோல, அங்குமிங்கும் தானே உருட்டிக் கொண்டு நிற்பது அருவெறுப்பைத் தருகின்ற ஆட்டமாகும்.

உருட்டிக் கொண்டேயிருக்கலாம் என்ற நினைப்போடும், பிறர் வந்து தடுக்கட்டும் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து இருந்து கொண்டும், அவர்கள் வந்து தாக்கும்போது, அவசர அவசரமாகப் பந்தை தன் பாங்கருக்கு வேறு வழியின்றி, இக்கட்டான சூழ்நிலையில் எங்கேயோ போகுமாறு வழங்குவதும் தற்கொலைக்கு ஒப்பான தவறான ஆட்டமாகும். இதனால் பல தொல்லைகள் அவருக்கும் அவரது குழுவினருக்கும் ஏற்படும்.

ஆகவே, பந்தை உடனே வாங்கிக் கொண்டு, எதிர்க் குழுவிற்குள் முன்னேறுவதுதான் சிறந்த வழியாகும். அதன் மூலமாகவே, விரைவாக செல்லவும் முடியும். தனது பாங்கர் எங்கிருக்கிறார் என்பதை முதலில் பார்த்துக் கொண்டு, அவருக்கு எந்த முறையில் வழங்கலாம்? தரையோடா அல்லது மேலாகவோ? எப்படி