பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும் கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ-தொண்டர் விருந்தைப்பார்த் துண்டருளும் வேளுரென் னாதர் மருந்தைப்பார்த் தாற்சுத்த மண். (120) இந்த உலகிலே எந்நாளும் மருத்துவராகவே தாம் வீற்றிருந்த போதிலும், தம் கழுத்திலே அமைந்த கறையாகிய நோயினை அவர் தீர்த்துக்கொள்வதனை எவரேனும் கண்டிருக்கிறீர்களோ? கண்டது கிடையாதே தொண்டர்கள் படைக்கின்ற விருந்துகளை எதிர்பார்த்து, அவற்றை உண்டு அருளுகின்ற, வேளுரிலிருக்கும் என்னுடைய தலைவரின் மருந்தைக் கவனித்துப் பார்த்தால், அது வெறும் மண் என்பதையாவது யாரும் அறிவீர்களோ? பெருமானை இகழ்வது போலப் புகழ்கிறார் கண்டவினை தீர்க்கின்றார்’ என்பதனை, “ஆன்மாவுக்கு நோயாக கண்ட இருவினையையும் போக்குகின்றார்” எனவும், தொண்டரின் காணிக்கையினை ஏற்று உதவுபவர் எனவும், புற்று மண்ணே சிறந்த மருந்தாகுமெனவும் கொள்ளுக. நெருப்பை அனைத்தவள் 'புள்ளிருக்கும் வேளுர்’ எனப் புகழ்பெற்று விளங்குகிற வைத்தீசுரன் கோயிலுக்குச் சென்றிருந்தார் காளமேகம். அங்கே, பெருமானைத் தரிசிப்பவர், அம்மையின் பாகமாயமைந்த நிலையிலே நெஞ்சினைப் பறிகொடுத்தார். அப்போது பாடியது இது. தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே தீத்தானு முன்றன் சிரிப்பிலே-தீத்தானுன் மெய்யெலாம் புள்ளிருக்கும் வேளுரா உன்னையிந்தத் தையலா ளெப்படிச் சேர்ந்தாள்? (121) புள்ளிருக்கும் வேளுரிலே கோயில் கொண்டிருக்கின்ற பெருமானே! நின் நெற்றிக்கண்ணில் விளங்குவதும் நெருப்புத்தான், நின் திருக்கரத்திலே இருப்பதும் நெருப்புத்தான். நின் திரிபுரம் எரித்த சிரிப்பிலே எழுந்ததும் நெருப்புத்தான். நின் திருமேனி முழுவதுமே நெருப்பு மயமானது தான்.இப்படி இருக்கவும், இந்தப் பெண்மணியான உமையம்மை நின்னை எப்படி விரும்பிவந்து அணைந்தாளோ? அதுதான் எனக்கும் வியப்பாயிருக்கிறது பெருமானே! புள்ளிருக்கும் வேளுர் - சடாயு பூசித்த திருத்தலம். அம்மை தண்மையுடையவள். “அவள் எப்படி நெருப்பு மயமான உடலுடைய அப்பனுடன் சேர்ந்துள்ளாள்? இப்படிக் கற்பித்து வியக்கிறார் கவிஞர்.