பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 81 எந்த வினை தீர்ப்பார்? வேளுர் வைத்தியநாதரைத் தரிசித்தபின், காளமேகம் அவரைப்பற்றிப்பாடுகின்றார். "இவருடைய சொந்தக்காரர்களின் துன்பங்களையே இவரால் தீர்க்க முடியவில்லையே? இவர் எங்ங்னம் ஐயா பிறருடைய வினைகளைத் தீர்ப்பார்?' என்று கேலி பேசுகிறார். வாதக்கா லந்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம் பேதப் பெருவயிறாம் பிள்ளைதனைக் - கோதக்கேள் வந்தவினை தீர்க்க வகையறியார் வேளுரர் எந்தவினை தீர்ப்பார் இவர்? (122) சொல்லுவதைக் கேட்பாயாக, வேளுரரான சிவ பெருமானுக்குத் தமக்கே வாதக்காலாம்; அவர் மைத்துனர்க்கு நீரிழிவாம்; அவர் பிள்ளைக்கு விகாரமான பெருவயிறாம்! இவ்வாறு, தமக்கும் தம்மவர்கட்கும் வந்த நோய்களைத் தீர்க்கவே வகை அறியாதவராயிருக்கும் இவர், வேறு எந்த வினையைத்தான் தீர்க்கப் போகிறார்? கால் வாதம் - காற்றே திருவடியான நடனநிலை நீர் இழிவு - நீரான கடலிடையே துயில்வது. பேதப் பெரு வயிறு மாறுபாடான பருத்த தொந்தி; மகோதரம். தம் வீட்டு நோய்நொடிகளையே தீர்க்கமுடியாது தத்தளிக்கும் அவர், எப்படி நம் வினைகளைத் தீர்க்கப் போகிறார் என்று நிந்திப்பது போலவும் தோன்றும். குறமகளை மணந்தான் முருகப் பெருமான் குறக்குலக் கொடியான வள்ளியை மணந்தான் அல்லவா. அதனால், பலரும் வருத்தம் அடைந்தார்கள் என்று சொல்வதுபோலக் கடவுளரின் தன்மைகளை அமைத்துப் பாடிய செய்யுள் இது. மருகிருக்கும் வேளுரின் வயித்திமகன் குறமகளை மணந்தா னென்றே உருகியர னஞ்சுண்டா னுமையவளுந் தவம்புரிந்தா ளுயர்மான் மேனி கருகிமிக மண்டின்றான் கமலன்முக நாலானான் கடவு ளோர்கள் இருவிழியு மிமையாம லிரவுபக லுறங்காம லிருக்கின் றாரே. (123) வாசனைச் செடிகள் (மருக்கொழுந்தும் ஆம்) விளங்குகின்ற புள்ளிருக்கும் வேளுரிடத்தே கோயில் கொண்டிருக்கிற