பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் வைத்தீசுரரின் திருமகன், குறவனின் மகளைச் சென்று மணந்து கொண்டான். அதனை அறிந்ததும், அவன் தகப்பனான வைத்திய நாதன் நஞ்சைக் குடித்துவிட்டான். தாயாகிய உமையோ தவம் செய்யலானாள். உயர்ந்த மாமனான திருமாலோ தன்மேனி கருநிறம் பெற வருந்திப் பெரிதும் மண்ணைத் தின்னத் தொடங்கினான். பிரமனோ முகத்தைத் தொங்கவிட்டவனானான். மற்றைய கடவுளர்களோ கண்கள் இமையாதவராகி இரவுபகல் கவலையுற்றவர்களாக உறங்காமல் இருக்கின்றார்கள். குலமுறை தவறியதனால், இப்படி உறவினர் தம் உயிரை மாய்த்துக் கொள்ளக் கருதினார்கள் என்பது போலக் கூறுகிறார். இவை அவர்களின் சிறப்புக்களா தலையும் உய்த்து அறிக. . எப்படி வந்தது? காளமேகம், அண்ணமலையின் அருணாசலப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது சிறுத்தொண்டர் கதை அவர் நினைவிலே எழுந்தது. சிறுத்தொண்டர் தம் மகனையே அறுத்துச் சமைத்துப் பரிமாறிநின்றபோது, பெருமான் "சீராளா என்று அழைக்க, அவன் ஓடிவந்து நின்றதையும் நினைத்துக் கொண்டார். 'எப்படி வரமுடியும்’ என்று கேட்பதுபோல, அந்தத் திருவிளையாடலைப் போற்றுகின்றார். சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்தி லேபாதி இட்டகலத் திற்பாதி இட்டிருக்கத் - திட்டமுடன் ஆடிவந்த சோணேசர் அன்றழைத்த போதுபிள்ளை ஓடிவந்த தெவ்வாறுரை? (124) சிவனடியாராக வந்த இச் சிவபிரானுக்குச் சிறுத்தொண்டர் படைத்த பிள்ளைக்கறியானது. சட்டியிலே பாதி - சட்டியிற் பாதியாயும், அந்தச் சட்டுவத்திலே பாதி - அந்தச் சட்டியிலிருக்கும் சட்டுவத்திலே ஒரு பாதியாகவும், இட்டகலத்தில் பாதி யிட்டிருக்க படைத்த உண்கலத்திலே இன்னொரு பாதியாகவும் இட்டிருக்கவும், திட்டமுடன் ஆடிவந்த சோணேசர் - உறுதியுடன் திருவிளையாடல் நிகழ்த்தவே வந்திருந்த அந்த சோணேசரான சிவ பெருமான்; அன்று அழைத்தபோது பிள்ளை ஒடி வந்தது எவ்வாறு உரை அன்று அறுக்கப்பட்ட பிள்ளையை 'வருக என்ற அழைத்தபோது, அந்தப் பிள்ளையும் ஒடி வந்தது எவ்வாறு? அதனை எமக்கும் சொல்வாயாக! ஊதும் குரங்கு! கங்கைகொண்ட சோழேச்சுவரம் என்றொரு திருத்தலம் இருக்கிறது. அதன்கண் கோயில் கொண்டிருக்கும் ஈசரைச் சிறப்பித்துப் பாடுகிறார் புலவர். பாடுபவர், சோழனின் இலங்கை வெற்றியையும் சேர்த்தே பாடுகிறார்.