பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் ஊர் காணார் அந்த நாளிலே, சிவபெருமான் பாற்கடலிலே எழுந்த நஞ்சினை உண்டு உலகினைக் காத்தனர். அவர் நஞ்சினை உண்ணாமலிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? இதற்கு விடை கூறுகிறார் கவிஞர். கடுக்கை முடியானே காலைமுடித் தான்போற் கடுக்கைமுடி யானாகிற் காணார்-கடுக்கை உரலடிமீ துற்றானும் உம்பர்களும் மற்றும் உரலடிமீ துற்றானும் ஊர். (127) கொன்றையைத் திருமுடியிலே அணிந்துள்ள சிவ பெருமானே முன் காலனை உதைத்து அழித்தான். அது போலவே, அவனே நஞ்சினையும் குடித்தான். அப்படி அவன் குடியானாகில், வேதனும், துதிக்கையுடைய வெள்ளை யானையின் மீது அமர்வோனான இந்திரனும், தேவர்களும், மற்றும் உரலிலே கட்டுண்டு மத்தினாலே அடிபட்ட திருமாலும் ஆகிய இவர்கள் யாவருமே தங்கள் தங்கள் ஊரைச் சென்று காணமுடியாதவராகி அழிந்திருப்பார்களே! v தன் அன்பனைக் காத்தாற் பொருட்டாக எமனை உதைத்த பெருமானே, மீளவும் தேவரைக் காக்கும் பொருட்டாக நஞ்சினையும் உண்டானவன் என்க. இதனால் அவனே முத்தேவரிற் சிறந்தவன் என்பதும் கூறினர். ஏன் எரித்தீர்? திருவிடை மருதூர்ச் சிவபெருமானைக் குறித்துப் பாடியது இது. பெருமான் மன்மதனை எரித்த செயலைக் குறித்து நிந்திப்பது போல அமைந்தது. கண்ண னிடுங்கரியும் காட்டுசிறுத் தொண்டரன்பிற் பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோ-தண்ணோடு மட்டியையுஞ் சோலை மருதீச ரேபன்றிக் குட்டியையேன் தீய்த்தீர் குறித்து? (128) தண்மையுடனே தேனும் பொருந்தியிருக்கும் சோலையினை யுடைய மருதுரிற் கோயில் கொண்டிருக்கும் பெருமானே! காட்டிடத்தே கண்ணப்ப நாயனார் படைத்த ஊன்கறியும், சிறுத் தொண்டர் அன்பினாலே செய்தளித்த சிறுவனுடைய கறியும் நுமக்குப் போதாதோ? நீர் பன்றிக் குட்டியையும் ஏனய்யனே சுட்டீர்? "பன்றிக்குட்டிக் கறிக்கு ஆசைப்பட்டு நீர் ஏனய்யா சுடுகிறீர்? என்று கேட்பது போலப் பெருமானைக் கேட்கிறார் கவிஞர். "பன்றி' என்றது பன்றியவதாரம் எடுத்த திருமாலையும், பன்றிக்