பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 85 குட்டி' என்றது மால் மகனான மன்மதனையும், தீய்த்தீர்' என்றது மன்மதனை எரித்ததையும் குறிப்பதாம். பொய்யிலா மெய்யர் திருத்துருத்திப் பெருமானைத் தரிசிக்கச் சென்ற கவிஞர் பெருமானின் ஆபரணமாகிய பாம்பினைக் குறிப்பிட்டு இவ்வாறு பாடுகிறார். காலையிலும் வேலை கடையக் கயிறாகும் மாலையிலும் பூமுடித்து வாழுமே-சோலைசெறி செய்யிலா ரம்பயிலும் செந்துருத்தி மாநகர்வாழ் பொய்யில்லா மெய்யரிடும் பூண். (129) சோலைகள்செறிந்துள்ள வயல்களிடத்தே முத்துக்கள் விளைகின்ற 'செந்துருத்தி' என்னும் இப்பெரிய திருநகரிடத்தே கோயில் கொண்டிருக்கும் பொய்யிலா மெய்யராகிய பெருமான் அணிந்து கொண்டிருக்கும் ஆபரணமும் ஒர் ஆபரணமாமோ? அது காற்றையே உண்ணும். பாற்கடலைக் கடைவதற்கு மத்துக் கயிறாகவும் விளங்கும். திருமால் உண்ணுகின்ற உலகத்தினை முடிமேற் சுமந்தும் அது வாழ்ந்திருக்கின்றதாகுமோ? கால் + அயில் = காலையிலும் = காற்றை உண்ணும். வேலை - கடல் மால் + அயிலும் = மாலையிலும் பூ + முடித்து =பூ முடித்து =பூ - பூமி முடித்து முடி மேலாகக் கொண்டது, பொய்யிலா மெய்யர் - நித்தியமான மெய்த் திருமேனியினை உடையவர்; சிவபிரான். ஏறும் விடை திருவீழிமிழலைச் சிவபிரானைத் தொழுது நின்ற கவிஞர் பெருமானின் இடபமாக இருக்கும் திருமாலைச் சிறப்பித்துப் பாடுகிறார். காலாற் படியளக்குங் கண்ணிடந்து பூசிக்கும் சேலாங் கமடமாஞ் சிங்கமாம்-பாலாகும் ஆழியப்பி லேதுயிலு மைவர்க்குத் தூதாகும் விழியப்ப ரேறும் விடை. (130). திருவீழியப்பரான பெருமான் ஏறிச்செலுத்தும் விடையான திருமால், தன் திருவடிகளால் நில உலகத்தையே அளப்பர்; கண்ணைத் தோண்டி இட்டும் பூசிப்பர் பாற்கடலான நீரிலேயும் நித்திரை செய்வர் ஐவர்க்கு தூதாக நடக்கவும் செய்வர். மேலும் அவரே மச்சாவதாரனாகவும் கூர்மாவதாரனாகவும், நரசிங்காவ தாரனாகவும் விளங்குபவருமாவர்.