பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் படி - பூமி, இடத்து - தோண்டி ஆழி அப்பு = ஆழியப்பு - கடல்நீர் கண்ணிடந்து பூசித்தல் - திருமால் சிவனைக் கண்மலர் தூவி வழிபட்டது. ஒரு மணி திருவரங்கநாதரை ஒரு மணியாக உவமித்துப் பாடிய சிலேடைச் செய்யுள் இது. பாங்கு பெருந்திரு வைந்நூற்றிரட்டிப் பணிவிடையில் தூங்கு மதிலொரு மாவேற்றமுண்டு சுரர்முனிவர் ஆங்கவர் செப்பிற் கடங்காதுலக மனைத்தும்பெறும் ஓங்கு மரங்கத் திருப்பெட்டகத்து ளொருமணியே. (131) மணி. புகழ்பெற்ற திருவரங்கத்துத் திருப்பெட்டகத்து வீற்றிருக்கின்றது ஒரு ஒப்பற்ற இரத்தினம் தன்பால் மிகவும் அழகு வாய்ந்தது அது. ஆயிரம் பணவிடை நிறையளவிலே நிறுக்கப்படும் அத்துணை பெரிதும் அது. அதற்கு மேலும் ஒரு மா அளவு மிகுந்திருப்பது எனவும் கூறலாம். தேவர் முனிவர் முதலிய பெரியோர்கள் அதனைப் புகழின் அதற்குள் அடங்காத சிறப்பும் உடையது. உலகமெல்லாம் அதற்கு ஈடாகக் கொடுப்பினும் அது அந்தத் தகுதியினை உடையதேயாகும். அரங்கநாதர் புகழாற் சிறப்புற்ற திருவரங்கத்துத் திருக்கோயிலுள்ளே விளங்குகின்றனர், ஒப்பற்ற நீலமணி போல விளங்கும் மேனியனாகிய அரங்கப் பெருமான். அவர் தன் மார்பாகிய பகுதியிடத்தே திருமகளைக் கொண்டிருப்பர். ஆயிரம் படத்தினையுடைய பாம்பணையின்மீது பள்ளி கொள்பவர். அப்படிப் பள்ளிகொள்வதிலும் ஒரு பெரிய உயர்வு உள்ளதாகும். தேவரும் முனிவரும் போற்றினாலும் அவர்களுடைய போற்றுதலையும் கடந்து நிற்பவர் அவர். உலகனைத்தையும் தன் உதரத்தே வைத்துக்காக்கின்ற ஆதிமூலமும் அவரேயாவர். இவ்வாறு, இரு பொருள்படச் சிலேடையாக அமைந்தது இச் செய்யுள். மயிலும் பாம்பும் திருவரங்கநாதர் பாம்பணையிலே பள்ளிகொண்டிருப்பவர். முருகப்பெருமான் மயில்வாகனத்திலே ஊர்ந்து வருபவன். அவன் திருமாலிற்கு மருமகன் முறையினனும் ஆவான். அவன் தன் மாமனைப் பார்க்கச் செல்லுகிறான். அப்போது நிகழ்வதாகக் கற்பித்துப் பாடியது இது.