பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் இதனை திருவரங்கநாதரைக் குறித்ததாகவும் கொள்வர், போரிற் கலந்து படையெடேன் என்ற பெருமானே வெற்றிக்கு காரணனாயின் என்று நிந்தித்ததுபோல அவனைக் புகழ்ந்தவாறு காண்க. வரதரின் யானை வாகனம் காஞ்சியிலே, வரதராசப் பெருமான் யானை வாகனத்தே திருவீதிஉலா வருகிறார்.அந்தக் காட்சியை இப்படி வருணிக்கிறார் காளமேகம் ஒருமா என்பது ஒன்றில் இருபதிலொரு பங்கு. அதனை அமைத்து அழகாகச் செய்யுள் இயலுகின்றது. எட்டொருமா எண்காணி மீதே இருந்தகலைப் பட்டொருமா நான்மாவிற் பாய்ந்ததே-சிட்டர்தொழும் தேவாதி தேவன் திருவத்தி பூர்வரதன் மாவேறி வீதிவரக் கண்டு. (134) அவன் மாவேறி வீதியிலே வந்தான். அதைக் கண்டு ஒருமா நான்மாவிற் பாய்ந்தது என்று சொல்லுகிறார். இதன் பொருள். எட்டு ஒருமா எண் காணி மீதே இருந்த (எட்டு ஒருமா+இரண்டுமா (எண் காணி) = பத்துமா - அரை) ஒரு நங்கையின் அரையின் மீது இருந்த, கவலைப்பட்டு - ஆடையாகிய பட்டானது, சிட்டர் தொழும் தேவாதிதேவன் திரு அத்தியூர் வரதன் - தூய்மையான ஒழுக்கமுடைய பெரியார்கள் தொழுது போற்றும் தேவர்களுக்குள் ஆதிதேவனும் திரு அத்திகிரி என்னுமிடத்தே வீற்றிருப்போனுமான வரதராசப் பெருமான் மாவேறி வீதி வரக்கண்டு யானையாகிய விலங்கின் மேலாக அமர்ந்து திருவீதியிலே உலாவரக் கண்டு, ஒருமா, நான்மாவிற் பாய்ந்ததே (ஒருமா - நான்மா = ஐந்துமா - காலில்) அரையி னின்றும் நழுவிக் காலில் வீழ்ந்ததே பெருமான் திருவீதி உலாவரக் கண்டு அவன் அழகிலே மயங்கிய ஒரு நங்கை தன் இடையிற் பட்டுத் தளர்ந்து சோரக் காதல் மயக்கத்தினளாகி நின்றாள் என்பது கருத்து. மண்ணை உண்டார் கண்ணபுரப் பெருமானைத் தரிசிக்கச் சென்றிருந்தார் காளமேகப் புலவர். அப்போது மாயனார் மண்ணை உண்ட செய்தியைக் குறித்து இப்படிப் பாடுகின்றார். கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார் மண்ணையுண்டார் வெண்ணையுண்ட மாயனார் - என்னும் சிரக்கப் பரையேந்திச் செங்காட்டி லீசர் இரக்கப் புறப்பட்டா ரென்று. (135)