பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 O காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கண்ணபுர மாலே கடவுளிலும் நீயதிகம் உன்னிலுமோ யானதிக மொன்றுகேள் - முன்னமே உன்பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமில்லை என்பிறப்பெண் ணத்தொலையா தே. (137) “கண்ணபுரப் பெருமானே! கடவுளாகிய சிவபெருமானைக் காட்டினும் நீ பெரியவன் தான், உன்னைக் காட்டிலுமோ யானே பெரியவன். ஒரு செய்தி மட்டும் கேட்பாயாக. உன்னுடைய பிறப்போ முன்னாளிலே பத்து மட்டுமே யாகும். உயர்வுடைய சிவனுக்குப் பிறப்பு ஒன்றுமே கிடையாது. ஆனால் என் பிறப்பு எவ்வளவு தெரியுமா? எண்ணத் தொலையாத அளவினது! இதையாவது அறிந்து கொள்க’ 'காளமேகம் நுழைந்தால் பெருமாள் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று கருதிக் கதவடைத்த நம்பியாரை வெட்கமுறச் செய்வதற்குக் கவிஞர் இப்படிப் பாடினார் என்று கொள்ள வேண்டும். புறப்பட்ட வேடிக்கை சிவபெருமானின் நகர்வலத்தைக் கண்டகாளமேகம் அதனை நிந்திப்பதுபோல இப்படிப் போற்றுகின்றார். வாணியன் பாட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி சேணியன் போற்றக் கடற்பள்ளி முன்றொழத் தீங்கரும்பைக் கோணியன் வாழ்த்தக் கருமான் றுகிறனைக் கொண்டணிந்த வேணிய னானவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே! (138) "பிரமன் மறை முழக்கம் செய்து வரவும், வெண்ணிற எருதான நந்தி சுமந்துவரவும், வயிரவனும் முருகனும் இந்திரனும் போற்றி வரவும், திருப்பாற் கடலில் பள்ளி கொள்வோனான திருமால் தொழவும், இனிய கரும்பினையே வில்லாக வளைத்துக் கொள்வோனான மன்மதன் வாழ்த்து உரைக்கவும், யானைத் தோலை உரித்துக் கைக்கொண்டு அணிந்த சடாமுடியினை உடையவனும், எவருக்கும் காட்சிக்குத் தட்டுப்படாதவனுமான சிவபிரான் வெளியே உலாவரப் புறப்பட்டது ஒரு வேடிக்கையே” பாட்டை நேராகவே 'வாணியன் பாட' என்றாற் போலப் பொருள்கொண்டால் நிந்தையா யிருப்பதும், நுட்பமாகக் கருதினால் பொருள் புலனாவதும் காண்க. வாணியன் - கலை வாணியை உடையவன்; பிரமன். வண்ணான் வண்ணமுள்ள ஆன், நந்தி; வடுகன் - வயிரவன் செட்டி - முருகன்; கடற் பள்ளி - கடலிற்பள்ளி கொள்ளுகிற திருமால், கருமான் - யானை; தட்டான் - காட்சிக்குத் தட்டுப் படாதவன்.