பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 91 கனலேறி வந்தது சிவபிரான் இடபாருடராகப் பவனி வந்து கொண்டிருக் கின்றார். அந்தக் காட்சியிலே தம் உள்ளம் களிகொள்ளக் கவிஞர் இப்படிப் போற்றுகின்றனர். கரியொன்று பொன்மிகும் பையேறக் கற்றவர் சூழ்ந்து தொழ t எரியொன்று செல்வன் றுலாத்தினில் ஏற விருண்ட மஞ்சு சொரிகின்ற நாகமின் சோற்றினி லேறித் தொடர்ந்து வர நரியொன்று சொந்தக் கனலேறி வந்தது நங்களத் தே. (139) 'யானைமுகனாகிய பெருமான் பெருச்சாளி வாகனத்தே ஏறியவனாக உடன் வந்து கொண்டிருக்கவும், கற்றவரான சான்றோர் சூழ்ந்து தொழுதுகொண்டே வரவும், தீ நிறமான செந்நிறத்தைக் கொண்ட செல்வனாகிய முருகப் பெருமா னானவன் துலாமுழுக்குக் கட்டமாகிய மாயூரம் என்னும் மயிலின் மேலாக ஏறிவந்து கொண்டிருக்கவும், கருமையான மழை மேகங்கள் மழை சொரிகின்ற இமயத்தின் திருமகளான உமையம்மை அன்ன வாகனத்திலே ஏறிப் பின் தொடர்ந்து வரவும், சம்புவாகிய ஒரு தனிக்கடவுள் தமக்குச் சொந்தமான நந்தியின் மேலே ஏறியவராக நம்முடைய இடத்திலேயே வந்தருளு கின்றனரே! என்னே இதன் கண்கொள்ளாக் காட்சி! மிகும்பை பெருச்சாளி. நாகம் - மலை, இமயம், சோறு அன்னம் சொந்தக் கனல் - நம்+தீ+நந்தீ என்று கொள்ள வேண்டும். கொன்ற பழி போமோ? திருச்செங்கோடு ஒரு சிவத்தலம் அங்குச் சென்று சிவபெருமானைத் தொழுகிறார் காளமேகம், "நாட்டிலிருந்து ஓடிவந்து, இப்படி நீர் காட்டிலே தங்கியிருந்தாலும். நீர் முன்னர் செய்த கொலைப் பாவங்கள் உம்மை விட்டுப் போய்விடுமோ?” என்று கேட்கிறார். காலனை உதைத்தது; காமனை எரித்தது; சிறுத்தொண்டனிட்ட அமுதினை உண்டது ஆகிய திருவிளை யாடல்களை எடுத்துக்காட்டித் துதிக்கிறார். காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு பாலனையும் கொன்ற பழிபோமோ - சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர்திருச்செங் காட்டிலே வீற்றிருந்தக் கால். (140)