பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் “சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே ஒழுக்க முடையவர்போல நாட்டினிடத்தே பல தலங்களிலும் கோயில் கொண்டிருந்த தலைவரே! நீர் திருச்செங்காட்டிலே வீற்றிருந்தக் கால் நீர் திருசெங்காட்டிலே வந்து தங்கியிருந்தவிடத்தும், காலனையும் எமனையும், காமனையும் - மன்மதனையும், காட்டு சிறுத்தொண்டர் தரு பாலனையும் பக்திக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த சிறுத்தொண்டர் பெற்றெடுத்த சீராளன் என்ற சிறுவனையும், கொன்ற பழி போமோ - கொலை செய்ததனால் ஏற்பட் பழிச் சொற்கள் மறைந்து போய்விடுமோ? இத் தலத்திலே வீற்றிருக்கும் சுவாமியின் பெயர் உத்திராபதி ஈசுவரர். எங்கே இருந்தான் சிவன்? பூரீரங்கத்தார்கள் சிவனைக் குறித்துக் கேலி பேச நினைத்தனர். புதிதாகச் சிவமதத்தைச் சார்ந்தவரான காள மேகத்தை நோக்கி,'திருமால் உலகத்தைக் கவளமாக உண்டபோது, உங்கள் சிவன் எங்கே இருந்தார்? எனக் கேட்டனர். அப்போது காளமேகம் சொன்னது இது. அருந்தினா னண்டமெலா மன்றுமா லிசன் இருந்தபடி யேதென் றியம்பிற்-பொருந்தி பருவங்களம் யானைகொளப் பாகனதன் மீதே இருந்தபடி ஈசனிருந் தான். (141) "திருமால் அந்நாளிலே உலகம் முழுவதையுமே விழுங்கினான். அப்பொழுது ஈசன் இருந்தபடி எவ்வாறு?" என்று சொல்வதானால், யானையானது பெரிதான கவளத்தை எடுத்து உட்கொள்ளுகிறபோது, அதனை இயக்கும் பாகன் அதன் மீதிலே இருந்த நிலையைப் போலச் சிவபெருமானும் திருமாலின் மேலாகவே வீற்றிருந்தனன் என்று அறிக. அண்டம் - உலகம்; உலகத்து வடிவைக் குறித்தது. ஈசன் - சிவபெருமான். பொருந்தி - மனம் விரும்பி, கவளம் - சோற்றுத் திரளை. திருமாலை யானையாகவும், சிவபிரானை அவனைச் செலுத்தும் பாகனாகவும் கூறினார். கருவைப் பிரான் திருக்கருவை நல்லூரிலே, களாமரத்தினடியிலே கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் போற்றுகிறார் கவிஞர்களாமரம் என்பது களவு என்றும் சொல்லப்படுவதாகும் இது, களவாடுதல் என்ற பொருளையும் தரும். இப்படி அமைந்த இருபொரு ளமைதியை வைத்துப் பாடுகிறார் கவிஞர்.