பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 93 வெண்ணெய் திருடியுண்ட வேணியர னாரிருக்கக் கண்ணன்மேல் வைத்த களவேது-பெண்ணைத் தலையிற் சுமந்தான்மால் சர்ப்பத்தி லேறி அலையிற் றுயினறா னரன். (142) வெண்ணெயைத் திருடித்தின்ற கண்ணபெருமான் இருக்கவும், சண்டயணிந்த சிவபெருமானின்மேல் வைத்த களவு எதன் பொருட்டாகவோ? அரன் கங்கையாகிய ஒரு பெண்ணைத் தான் தன் தலையிற் சுமந்தானே அல்லாமல் களவினைச் சுமக்க வில்லையே? ஆனால், திருமாலோ களவின் விளைவுக்கு அஞ்சிப் பாம்பின்மேல் ஏறிக்கொண்டு கடலிடத்தே சென்றல்லவோ உறங்கலாயினான்? 'மொழி மாற்று' என்னும் பாவகை இது. சிவனுக்குச் சொல்வதை மாலுக்கும், மாலுக்குச் சொலவதைச் சிவனுக்குமாக மாற்றியமைத்துப் பொருள்கொள்ளல் வேண்டும். ஆண்டானும் தாதனும் ரீரங்கத்து வைணவரும், திருவானைக்காக் கோயிற் சைவர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். சிவனடியார்களை ஆண்டான்', அதாவது பெருமானால் ஆட்கொள்ளப் பட்டவன் என்றும், திருமாலடியார்களைத் “தாதர்கள்’ எனவும் சொல்வார்கள். தாதன் - அடியவன். இந்தச் சொற்கள் ஆண்டான் அடிமை எனவும் வேற்றுப் பொருள் தருவன. அதனைக் குறித்து ஆண்டான் அடியவன் என்றால் அடிக்கடி சண்டை நிகழாதிருக்குமோ!' எனக் கேட்பது போலச் சீரங்கத்தாரைத் தாதர்கள் எனப் பழிக்கிறார் கவிஞர். சீரங்கத் தாரும் திருவானைக் காவாரும் போரங்காேகப் பொருவதேன் - ஓரங்கள் வேண்டா மிதென்ன விபரந் தெரியாதோ ஆண்டானும் தாதனுமா னால். (143) "சீரங்கத்து வைணவரும் திருவானைக்காச் சைவர்களும் போர்க்களத்தே போல வாதிட்டுத் தொடர்ந்து தமக்குள் சண்டை செய்வது ஏனோ? இவ்வாறு கேட்டபின் பட்சபாதமான எதுவும் சொல்லுதல் வேண்டாம். இது என்ன ஓர் அதிசயமோ? இதன் விபரமும் நமக்குத் தெரியாதோ? ஆண்டானும் தாதனும் என்ற நிலையினர் அவர்களானால் அவர்கள் சண்டையிட மாட்டார்களோ? ஆண்டான் - இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற சிவனடி யான்! தாதன் - திருமால் அடியவன், இதனால் சிவனடியார்க்குத் தாதர்கள் அடியவர்கள் என்பதும் கூறினர்.