பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.4 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பிறவாத ஆம்பல் 'திருவலஞ்சுழி என்னும் திருவூரிலேயுள்ள விநாயகப் பெருமானைக் குறித்துக் கவிராயர் சொல்லிய சுவையான செய்யுள் இது. பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே இறுகாத தந்தி உருகாத மாதங்க மிந்துதுதல் நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடுசுனையில் பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே!(144) தும்பி, கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்பனவெல்லாம் வெவ்வேற பொருளைக் குறிப்பனவேனும், அவை யானையின், பெயருமாகும், அதனால் அவற்றைக் குறிப் பிடுவது போல யானை முகனைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றனர். பறத்தலைச் செய்யாத தும்பி (வண்டு), கருகிப் போதலைச் செய்யாத வெம்மையான கரி (அடுப்புக்கரி), பண்முறை பிறழ்ந்து கட்டமையாத தந்தி (வீணையின்) தந்தி). அனலிடத்தே உருகாத மாதங்கம் (பெரிதான தங்கக் கட்டி), பிறையனைய நெற்றியிடத்தே நிறங்காட்டாத சிந்துரம் (பொட்டு), பூசுதற்குப் பயன்படாத களபம் (களபம் - சாந்து), நெடிய சுனைநீரினிடத்தே தோன்றாத ஆம்பல் (ஆம்பற்பூ) ஆகிய விநாயகப் பெருமான் திருவலஞ் சுழியினிடத்தே வந்து அருள் செய்தலைப் பெற்றேன் யான். ஆறுமுகன் பெருமை ஒரு முருகன் தலத்திலே, பெருமான் பவனி வருகின்றான். அந்த ஆடம்பரத்தைக் கண்டார் காளமேகம். அப்பன் பிச்சை எடுத்துச் சீவிக்கிறவன்; ஆத்தாள் மலை நீலி மாமன் உரியிலே வெண்ணை திருடி உண்டவன்; அண்ணன் சப்பைக் காலன்; பெருவயிறன், குடும்ப நிலைமை இப்படிப்பட்ட அருமையுடன் இருக்கிறது இவனுக்கு" என்று நிந்திப்பது போலப் போற்றுகிறார் கவிஞர். 'முருகன் பெருமையைப் பாடுக” என்று கேட்கப் பாடியதாகவும் கொள்க. அப்ப னிரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங் கெண்ணும் பெருமை இவை. (145) ஆறுமுகத்தானுக்கு இங்கு எண்ணும் பெருமை ஆறுமுகத்தினனான முருகனுக்கு இவ்விடத்தே நாம் கருதக் கூடிய பெருமைகள் யாவை எனில். அப்பன் இரந்து உண்ணி பெற்ற தகப்பனான சிவபெருமானோ பிச்சை ஏற்று உண்ணும் இயல்பினன், ஆத்தாள்