பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 95 மலை நீலி - பெற்ற தாயோ மலையிடத்துப் பிறந்த கொடுமைக்காரி (நீலவண்ணம் உடையவள்.) - ஒப்பரிய மாமன் உறி திருடி, ஒப்பிடுவதற்கும் அரியவனான தாய் மாமனோ உறியிலே வெண்ணெய் திருடுபவன்; சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் சப்பைக் காலனான இவன் அண்ணனோ (மகோதரம் என்னும் பெரியவயிறாகத் தோன்றும் நோயினை உடையவன்) பெரிய வயிற்றினை உடையவன், இவை எனும் இவைதாம். காணிக்கு வந்திருந்தான் பூரீரங்கத்துக் கோயிலார் சிவகுமாரனான பிள்ளை யாருக்குத் திருநாமத்தை இட்டுவிட்டனர். அத்துடன் விஷ்ணுவே பரமன் எனவும் கூறிக்கொண்டனர். அப்போது கவிஞர் பாடியது இது. தந்தை பிறந்திறவாத் தன்மையினால் தன்மாமன் வந்து பிறந்திறக்கும் வன்மையினால் - முந்நொருநாள் வீணிக்கு வேளை எரித்தான் மகன் மாமன் காணிக்கு வந்திருந்தான் காண். (146) “முன் ஒரு காலத்தே வீணான கருவங்கொண்டு சென்ற மன்மதனை எரித்த சிவபெருமானது மகனான விநாயகன். தன் தந்தை இறப்பும் பிறப்பும் அற்றவரான தன்மையுடைமையால், தன் மாமனாகிய திருமால் பிறந்து இறக்கும் வள்ளன்பை உடையவராயிருத்ததலினால், மாமனார் சொத்துக்கு வாரீசாக வந்து இருந்தனன்” என்று அறிவீராக சிவபிரான் இறவாத பெருமான். அவர்க்குப் பின் அவருடைய சொத்துக்களுக்கு வாரிசாக வரச்சந்தர்ப்பமே கிடையாது. மாமன் மகனான மதனனும் சிவனால் எரிக்கப்பட்டு விட்டான். அதனால், மாமன் இறந்ததும் அந்தச் சொத்துக்கு வாரிசாகப் பிள்ளையார் வந்திருக்கிறார், இப்படி ஏளனம் செய்கிறார் கவிஞர் காணி - நிலங் கரைகள். இச்செய்யுள். தந்தை பிறந்திறவாத் தன்மையாற் றன்மாம னந்தம் பிறந்திருக்கும் ஆதலாற்-முந்துமளி நாணிக்கு வில்வேளு மாய்தலால் நன்மாமன் காணிக்கு வந்திருந்தான் காண்’. (147) எனவும் வழங்கும் (தநா, சரிதை203) 'தன் தந்தையோ பிறந்து இறவாது நிலையிருக்கும் தன்மையன். தன் மாமனான திருமாலோ பன்முறையும் பிறந்து இறக்கும் தன்மையன். அவன் மகனான, வண்டை நாணாகவுடைய கரும்பு வில்லேந்தியான மன்மதனும் செத்துவிட்டான். ஆதலால், விநாயகப் பெருமான், தன் தாய்மாமனின் காணிக்கு உரிமை கொண்டாட வந்திருக்கிறார். இதனைக் காண்பீராக என்பது பொருள்.