பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நஞ்சு உண்ணி நஞ்சு உண்டவன் சிவபிரான். அதனைக் குறித்து நஞ்சுணி” என இடக்கராகக் குறிப்பிட்டுப் பாடுமாறு சிலர் கேட்கக் காளமேகம் பாடுகிறார். சிரித்துப் புரமெரித்தான் சிந்துரத்தைப் பற்றி உரித்துதிரம் பாய வுடுத்தான்-வருத்தமுடன் வாடுமடி யாருடனே வானவரும் தானவரும் ஒடுபயந் தீர்த்தநஞ் சுணி. (147) உயிரே அழிந்து போமோ என்ற வேதனையுடையவராக வாட்டமுறும் அடியார்களுடனே தேவர்களும் அசுரர்களும் அச்சமுற்று ஒடிக்கொண்டிருந்தபோது, அந்த அச்சத்தைத் தீர்த்து நஞ்சை உண்டவன் சிவபெருமான். மேலும், அவன் தன் சிரிப்பினாலே திரிபுரக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய வனும், தாருக வனந்து முனிவர்கள் ஏவிய யானையைப் பற்றி அதன் தோலை உரித்து, உதிரம்கொட்டிக் கொண்டிருக்க இடையிலே உடுத்துக் கொண்டவனும் ஆவான். நஞ்சை உண்டது ஒன்றுமட்டுமன்று; சிரித்துப் புரமெரித் ததும், சிந்துரத்தை உரித்ததும் அவனே என்று போற்றுகின்றார் அவர். நெய்யிலே கையிட்டான் தில்லை பொன்னம்பலத்திலே சிவபெருமான் நடனமாடு கின்றார். அவர் தம் கையிலே மழுவாயுதத்தை ஏந்துபவர். தில்லைக் கோவிந்தராயர் வெண்ணெய் திருடியுண்ட மாயன்; அவன் ஆயனும் ஆகியவன். இவற்றை வைத்துச் சுவையாகப் பாடுகின்றார் கவிஞர். தில்லைக்கா வுக்குட் சிதம்பரனா ராட்டையெடுத் தில்லைக்கா ணென்றுமழு வேந்தினார்-சொல்லக்கேள் மெய்யிலே கண்டேன்யான் மீண்டுங்கே ளாயனுமே நெய்யிலே கையிட்டா னே. (148) “தில்லைமரக் காட்டிலுள்ள சிதம்பரத்தே கோயில் கொண்டிருக்கும் பெருமான், ஆட்டை எடுத்தனர் (திருநடனம் செய்தனர்) யான் எடுக்கவில்லை பாரென்று தன் செயலையும் மறைத்துக்கொண்டு மழுவேந்திப் போரிடவும் அவர் தயாரா யிருந்தனர். சொல்வதனை இன்னமுங் கேள்; அவருடைய உடலிலேயே அவர் ஆடெடுத்திருந்ததன் தன்மையினை யானே நேரிற் கண்டேன் மீளவும் கேள்; ஆயனும் நெய்யிலே கையிட்டுச் சத்தியமும் செய்துள்ளனன்.”