பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மன்மதனையும் திரிபுரத்தையும் அவை செந்தழலால் எரிந்து விடும்படியாக ஒப்பற்ற தன் பத்தினியைத் துணைக்கொண்டே செய்தனன். அப்படிப்பட்டவனுக்கு நாளும் மறையோத வீற்றிருக்கின்ற சிறப்புத்தான் எதற்காகவோ? அது வேண்டாததே என்றதாம்’ அவளின் துணையைக் கொண்டே அவன் அந்தச் செயல்களைச் செய்திருக்க, அவளை போற்றாமல் அவனை மட்டுமே போற்றுவது முறையன்று; ஆதலின் போற்றுதல் அவனுக்கு மட்டும் எதற்காகவோ? துணைநின்ற அவளையே போற்றுவோம் நாம் என்கிறார் கவிஞர். இதுவோ படைத்திறன்? சிவபிரான், திரிபுரக் கோட்டைகளைச் சிரித்தே எரித்த சிறப்பினை உடையவன். அதனை நிந்திப்பது போலக் கவிஞர் இப்படிப் போற்றுகிறார். - தில்லைக்குள் வாழும் சிதம்பர ரேயும்மைச் செப்ப வென்றால் அல்லற் பிழைப்பே பிழைத்திருந் தீர்முப்பு ராதிகளை வில்லைத் தொடுத்தெய்ய மாட்டாம லேயந்த வேளைதனில் பல்லைத் திறந்துவிட் டீரிது வோதும் படைத் திறமே? (151) “தில்லை நகரத்தினுள்ளே வாழுகின்ற சிதம்பரரே? உம்மைப் பற்றிச் சொல்வதென்றால் நீர் துயரமானப் பிழைப்பினையே கொண்டிருக்கின்றவர் ஆகின்றீர் முப்புராதிகளான பகைவர்களை வில்லைத் தொடுத்து எய்து வீரனைப் போல வெற்றிக் கொள்வதற்கு முடியாமல், அந்தப் போரிடும் வேளையிலே பல்லைத் திறந்து காட்டினிரே? இதுவோ நும்முடைய படையாண்மை?” அல்லற் பிழைப்பு - கேவலமான பிழைப்பு போர் முனையிலே பல்லைக் காட்டுதல் மிகவும் கோழைத்தனமாகும்; அதனைச் செய்தவர் தாமே நீர்? என்கின்றனர். சிரித்தே எரித்த வெற்றிச் செயலைக் குறித்து இவ்வாறு நிந்தாஸ்துதியாகப் பாடுகின்றனர் என்று கொள்க. என் செய்வீர்? சிவபெருமான் பிச்சை எடுக்கின்றான். எதனால்? வேடிக்கையான ஒரு விளக்கத்தை அதற்குத் தருகிறார் காளமேகம்