பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் எருதாய்ச் சுமந்துபோ யேத்திக்கன சாத்திப் பொருதாழி வாங்கினதும் பொய்யோ?-பெருமாள் திருநாம மென்று நெற்றி தீட்டியதும் கச்சி ஒருமா விலக்கமல்ல வோ? (154) "திரிபுர தகன காலத்திலே எருதாக உரிக்கொண்டு பெருமானைச் சுமந்து போனான்; சிவபெருமானைப் போற்றித்தன் கண்மலரையே திருவடிக்குக் காணிக்கைப் பொருளாக்கி அருச் சித்துப் போரிடுதற்குரிய சக்கரப்படையினையும் அந்நாளிலே வாங்கினான்; அத்திருமாலின் இச்செயல் எல்லாம் பொய்யோ? மேலும், உங்கள் பெருமாள் திருநாமம் என்று தன் நெற்றியிலே சாத்திக்கொண்டிருப்பது தான் என்ன? காஞ்சிபுரத்திலே ஒப்பற்ற மாவின் அடியிலே இருக்கும் சிவபெருமானைக் குறிக்கொண்டு விளங்கும், அவனுடைய திருப்பாதங்களே அல்லவோ? 'திருமால் ஒப்பற்ற சிவபக்தன்! என்று கூறுவதன் மூலம் சிவனுடைய சிறப்பைக் காட்டுகின்றனர் காளமேகம். கொங்கை வடு சிவபெருமான் அருள் திருமேனியினை உடையவன் என்றாலும், அம்மையின் கொங்கைவடுக்கள் மட்டும் அவன் திருமேனியிலே ஒரு போதும் மறையாமலேயே விளங்கும் என்கிறார் காளமேகம், அரிய கற்பனைச் சுவை விளங்கும் சிறந்த பாடல் இது. ஆறா தொருக்காலு மையாமே கம்பருக்கு மாறா வடுவாய் மறையாதே-பேறாகச் செங்கையினா லேயழுத்திச் செய்யகச்சிக் காமாட்சி கொங்கையி னாலிட்ட குறி. (155) "ஐயா! தான் பெற்ற பெரும்பேறாகக் கருதிச் செவ்விய தன்மையுடைய காஞ்சிக் காமாட்சியம்மையானவள், தன் செங்கை யினாலே இறுக அழுத்தித் தழுவித் தன் கொங்கைகளினாலே இட்ட அடையாளமாகிய வடுவானது, ஒரு போதுமே நின் திருமேனியை விட்டு மறையவே மாட்டாது. என்றும் மாறாத வடுவாக அது நின்பால் விளங்கிக்கொண்டிருக்கும். சிவனே அனைத்துக்கும் முதலாகிய பெருமான் எனினும் அவன் அன்பர்க்கு அருளுகின்ற பெருங்கருணையும் உடையவன். அந்தக் கருணை வெள்ளத்தினாலேயே அம்மையின் கொங்கை வடுக்களை அவன் தன் திருமேனியிற் கொண்டிருக்கிறான் என்று அறிதல் வேண்டும். இதனால், பெருமானின் அருளும், அம்மையின் காதற்பெருக்கமும் கூறியதாயிற்று.