பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 101 ஞான குரு! அடியவர்கட்குத் தானே ஞானகுருவாக வந்து மெய்ப் பொருளை உபதேசித்துக் கடைத்தேற்றும் பெருமான் கச்சி ஏகாம்பரநாதனே! அவனுக்கு அந்த ஞானத்தை எவர் போதித்தனர்? அதனைப் பற்றிக் கூறும் செய்யுள் இது. எவர்தமக்கும் ஞானகுரு வேகாம்ப ரேசர் அவர்தமக்கு ஞானகுரு வாரோ-உவரியனை கட்டினான் பார்த்திருக்கக் காதலவன் றன்றலையிற் குட்டினான் தானே குரு. (156) “எத்தகையோருக்கும் ஞானகுருவாக உபதேசித்து அருள் செய்கின்ற பெருமான் கச்சி ஏகாம்பரநாதனே. அந்தப் பெருமா னுக்கு ஞானகுருவாக இருந்து அதனை உபதேசித்தவர் யார்? கடலுக்கு அணை கட்டியவனான திருமால் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரத்திலேயே, அவனுடைய மகனான பிரமனின் தலையிலே குட்டினானே அந்தச் சிவகுமரன்தான் அவனுக்கு ஞானகுருவாக இருந்து உபதேசித்த பெருமான். பிரணவப் பொருளை அறியாத பிரமனைத் தலையிலே குட்டிக் கந்தமாதனக் குகையிலே அடைத்து வைத்தவன் குமரப் பெருமான். பின்னர் தேவரும் மூவரும் வேண்ட அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனை விடுவித்த பெருமான், தன் தந்தையின் வேண்டுதலின்படி அவருக்குப் பிரணவப் பொருளை உணரத்தனன். அந்தக் குமரகுருபரனின் செயலையே காளமேகம் இப்படிக் கூறுகின்றனர். இதனாற் சிவபெருமானின் கருணை வெள்ளத்து மிகுதியையும் உரைத்தனர். புன்னீர் கேளா! திருவண்ணாமலைத் திருக்கோயிலிலே சுவாமி தரிசனம் செய்துகொண்டிருந்தார் காளமேகம். அவருடைய கவனம் சந்நிதிக்கு முன்னால் விளங்கும் நந்திப் பெருமானின் மேற்சென்றது. ‘புல்லும் தண்ணிரும் கேளாதே கல்லுருவாக விளங்கும் நந்தீசர்’ என்று பாடுகிறார் கவிஞர். நடக்கவறி யாதுகா னாலு முடக்கிக் கிடக்கவறி யும்புன்னி கேளா-விடக்கை யரைப் பணியார் சோகிரி யத்தனா ரோட்டில் இரப்புணியா ரேறும் எருது. (157) “நஞ்சினைக் கையிலே எடுத்து அந்நாளிலே உண்ட சிவபெருமான், பாம்பாரபணத்தையும் அணிந்த பரமன், சோணசைலத்தே அனைவருக்கும் அப்பனாகவும் விளங்கும் இறைவன், அவன் தலையோட்டிலே பிச்சையேற்று உண்கின்ற